திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் சுட்டியான இவர் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் பெற்றோருக்கு உதவியாக பல்வேறு வேலைகளையும் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கந்தசாமியின் வீட்டின் அருகே வசித்து வரும் ஒருவரின் வீட்டுக்கு ஊட்டி குன்னூர் பரலையாறு பகுதியைச் சேர்ந்த முரளிதரன் (வயது 21) என்ற உறவுக்கார வாலிபர் ஒருவர் விருந்துக்காக வந்திருந்தார். அந்த வாலிபர் 3 நாட்கள் வரை அங்கு தங்கியிருந்தார். அப்போது சிறுமிக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விடுவார்கள். அப்போது முரளிதரன் அடிக்கடி சிறுமியை பார்க்க வந்து சென்றுள்ளார். பக்கத்து வீட்டு உறவுக்கார பையன் என்பதால் சிறுமியின் பெற்றோரும் அதனை கண்டு கொள்ளவில்லை. 

 



 

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் தனது செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களை அந்த சிறுமிக்கு காண்பித்து அவரது உடல் பாகங்களை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை இந்த கொடுமை அரங்கேறி உள்ளது. பின்னர் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வழக்கம் போல் சிறுமி பள்ளிக்குச் சென்றார். அப்போது சக தோழிகளிடம் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பாக தெரிவித்தார். இது பள்ளியின் வகுப்பு ஆசிரியையின் காதுகளுக்கு எட்டியது. உடனடியாக அவர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் ஆபாச வீடியோவை காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குன்னூர் முரளிதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். திருச்சி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிகளை குறிவைத்து அடிக்கடி பாலியல் தொல்லை, சீண்டல்கள் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. 

 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.