pongal festival 2024: அறுவடைக்கு தயாரான சுமார் 30 லட்சம் செங்கரும்புகள்! அரசுக்கு கோரிக்கை விடுக்கும் திருச்சி விவசாயிகள்!

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைக்காக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கரும்புகள் விளைந்து நிற்கின்றது, அரசு உரிய விலை கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

Continues below advertisement

பொங்கல் பண்டிகை மற்றும் கோயில் வழிபாடுகளுக்காகவும் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு பயன்படுத்துவதோடு, கோயில் திருவிழாக்களில் சாமிக்கு வைத்து வேண்டுதல்களை வழிபடுவதற்கும் நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதன்தேவை குறைவுதான் என்பதால் குறைந்த பரப்பில் தான் செங்கரும்பு சாகுபடி செய்யப்படும். தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெற்ற பிறகு ஆண்டுதோறும் செங்கரும்பு சாகுபடி இருமடங்காக உயர்ந்தது. நிகழாண்டும் திருச்சி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 200 ஹெக்டரில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் என 14 ஒன்றியங்களிலும் பரவலாக ஆங்காங்கே அரை ஏக்கர் என்ற வகையில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

மேலும், மண்ணச்சநல்லூர் இருப்பினும், ஒன்றியத்தில் திருப்பைஞ்ஞீலி, மணப்பாறை வட்டத்தில் பாலக்குறிச்சி, அந்தநல்லூர் ஒன்றியத்தில் திருவளர்ச்சோலை, கிளிக்கூடு, மருங்காபுரி ஆகிய பகுதிகளில்தான் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் சுமார் 200 ஹெக்டேரில் செங்கரும்பு சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் கரும்புகள் என கணக்கிட்டாலும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கரும்புகள் விளைவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட வேளாண்மைத்துறைத் துறையினர் கூறுகையில், ”மாவட்டத்தில் அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான தேவைக்கும் அதிகமாகவே செய்யப்பட்டுள்ளது. செங்கரும்பு சாகுபடி கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரிடமும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 6 அடிக்கும் அதிகமான உயரம் உள்ளது. சில இடங்களில் 6 அடிக்கு குறைவாகவும் 4 அடி, 5 அடி கரும்புகள் உள்ளன. விவசாயிகளிடம் அரசு நிர்ணயிக்கும் அளவுள்ள அடிகளில் கரும்புகளுக்கு மட்டும் பணம் வழங்கி அவற்றை கொள்முதல் செய்யவுள்ளோம். மாவட்டத்தின் மொத்தத் தேவை 8.33 லட்சம் கரும்புகள் மட்டுமே. ஆனால், மூன்று மடங்குக்கு மேல் கரும்பு உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்தாலும் கொள்முதல் நடவடிக்கைகளுக்கு தயாராகவுள்ளோம். உதவிட தயாராகவுள்ளோம்” என்றார். 

மேலும், திருச்சி மண்டல கூட்டுறவுத்துறையினர் கூறுகையில், ”14 ஒன்றியங்களிலும் கரும்பு கொள்முதலுக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறை, இந்த குழுவில் கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளன. இக்குழுவினர்தான், வட்டாரம் வாரியாக அந்தந்தப் பகுதியில் உள்ள கரும்புகளை கொள்முதல் செய்வர். கிராம நிர்வாக அலுவலர் மூலம் சான்று பெற்று, விவசாயிகளிடம் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று உடனடியாக அவரவர் வங்கிக் கணக்கில் கொள்முதல் தொகை வரவு வைக்கப்படும்” என்றனர். 


மேலும், ”திருவளர்ச்சோலை பகுதியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், 5 பேர் இணைந்து ஒரு ஏக்கரில் செங்கரும்புகளை விளைவித்துள்ளோம். கடந்தாண்டு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு 2 ஆயிரம் கரும்புகள் வழங்கியதன் மூலம் செலவு, வெட்டுக் கூலி, வாடகை கூலி போக ரூ.16 ஆயிரம் லாபம் கிடைத்தது. அரசு அறிவிக்கும் முன்பே தனியார் ஒருவருக்கு பாதி கரும்புகளை ஒப்பந்தம் செய்துவிட்டதால் அவருக்கு ஒப்பந்தப்படி கரும்பு வழங்கினேன். தனியாரிடம் வழங்குவதைவிட அரசிடம் வழங்குவதில் சற்று கூடுதல் லாபம் கிடைக்கிறது. எனவே, இந்தாண்டு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு அதிகளவில் கரும்புகளை வழங்கவுள்ளேன். அரசு இந்தாண்டும் கரும்பு ஒன்றுக்கு ரூ.33 விலை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் என்றார். 

Continues below advertisement