தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. அதேசமயம் தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கடந்த 4ம் தேதி 6 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டது.தமிழகத்தில் தற்போது வரை 3 கோடியே 37 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் சுகாதாரத்துறை பணியாளர்கள் 8.83 லட்சம் பேர், முன்களப் பணியாளர்கள 11.83 லட்சம் பேர், 18-44 வயது உள்ளவர்கள் 1.60 கோடி பேர், 45-60 வயது உள்ளவர்கள் 1.06 கோடி பேர், 60 வயதுக்கு மேல் 49.93 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளை மாபெரும் சிறப்பு தடுப்பூசி மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, இதனையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நாளை நடைபெறும் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் பற்றிய விவரங்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சுமார் 505 முகாம்களும் ,மற்றும் நகரப் பகுதிகளில் 126 முகாம்களும், மொத்தம் 631 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1,37,500 மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் கோவிஷீல்டு, மற்றும் கோவாக்ஸின் ஆகிய இரு வகையான தடுப்பூசிகளையும் முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் அருகிலுள்ள முகாமிற்கு சென்று தங்களுக்கு உரிய தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பெரும் தொற்று பரவுவதை தடுக்க மாநில அரசு பல கட்டுபாடுகளை விதித்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சில மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மத்திய மண்டலத்தை பொருத்தவரை திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், போன்ற பகுதிகளில் தொற்றின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது, குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசங்கள் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.மேலும் கொரோனா தொற்று சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளை மாபெரும் சிறப்பு தடுப்பூசி மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.குறிப்பாக இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் என்ற மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி பொதுமக்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் தவறாமல் செலுத்தி கொண்டு,கொரோனா நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.