திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தமிழகத்தில் முற்றிலுமாக கஞ்சா போன்ற போதைப்பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்நிலையங்களுக்கும் உத்தரவிட்டு இருந்தார். இதன்படி மத்திய மண்டலத்தில் பல லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யபட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மீண்டும் அதிகரித்து வருவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது. இதையடுத்து, மாவட்டத்தில் முற்றிலும் ஒழிக்கும் வகையில் கஞ்சா ஒழிப்பு சிறப்பு படை நியமிக்கபட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட எஸ்பி கூறுகையில், தடை செய்யப்பட்ட கஞ்சா பயிரிடுவது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது கண்டறிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தோடு, பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு சிறப்பு கஞ்சா ஒழிப்பு படையினரை நியமித்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளை சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி .மணி உத்தரவிட்டுள்ளார். மேலும் பெரம்பலூர் நகர மற்றும் புறப்பகுதிகளில் மாவட்ட எஸ்பி மணி தலைமையில் வெள்ளந்தாங்கியம்மன், ஏரிக்கரை, சங்குப்பேட்டை ஆகிய இடங்களில் சிறப்பு ரோந்து அலுவலர் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், மதியழகன் பெரம்பலூர் சாரங்க டிஎஸ்பி சஞ்சீவ்குமார், பெரம்பலூர் டவுன் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் என அனைவரும் பெரம்பலூரை சுற்றியுள்ள நகரப்புற பகுதிகளில் கஞ்சா ஒழிப்பு வேட்டை ஈடுபட்டனர். இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி தெரிவித்திருப்பதாவது.. பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயிரிடுவது, விற்பனை செய்வது, மற்றும் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேற்படி குற்றத்தை செய்பவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்