பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிறுத்தம் அருகே சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் போட்டி தேர்வுகள் எழுதுவதற்காக, குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் படிப்பகத்தயும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் கற்பகம், காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்காக படிக்க வந்திருந்தவர்களிடம் கலந்துரையாடிய உதயநிதி அவர்களது கோரிக்கையை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
மேலும் அங்குள்ள புத்தகங்களை எடுத்து படித்து பார்த்துவிட்டு, நூலகத்தில் இருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். தொடர்ந்து பொது மக்களை பார்த்து காரில் நின்றவரே கையசைத்து விட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி பேசியது.. பெரம்பலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி எப்பொழுது கட்டப்படும் என்று கேட்டபோது விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இங்கு அமைச்சர் இருக்கிறார் அவர் அந்த பொறுப்பினை ஏற்று அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்றார்.
மேலும் நேற்று நடைபெற்ற பிளஸ் டூ பொதுத்தேர்வில் 50,000க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதவில்லை. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பிஸியாக இருக்கிறார் என்று அவருக்கு கீழே வருகை பதிவேற்றில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்த, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்த்து சிரித்துக் கொண்டே அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் சிந்தடிக் ஓடுதளம் அமைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்