திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில பங்கேற்க புதுச்சேரி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று திருச்சி விமானநிலையம் வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "புதுச்சேரி மாநில  பட்ஜெட் 13 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது, இது மிகவும் பெருமையான விஷயம். இந்த பட்ஜெட்டை பொருத்தவரை முதலமைச்சர் மற்றும் நான், முக்கிய அதிகாரிகள் ஒன்றிணைந்து ஆலோசனை செய்து உருவாக்கப்பட்டது. புதுச்சேரி பல விஷயங்களில் முன்னேறிய வருகிறது அதற்கு இந்த பட்ஜெட் ஒரு முன் உதாரணம் ஆகும் என்றார். தொடர்ந்து பேசிய அவர்,  இரவல் ஆளுநர் தான் முழுநேர பட்ஜெட்டிற்கு  ஏற்பாடு செய்துள்ளேன்.  மேலும் இந்த இரவல் ஆளுநர் தான் மக்களை சந்தித்துள்ளேன், இரவல் ஆளுநர் தான் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு தேவையான மருந்துகளை, தெலுங்கானாவில் இருந்து கொண்டு வந்து அளித்திருக்கிறேன். குறிப்பாக அங்கன்வாடி பயிலும் குழந்தைகளுக்கு மூன்று வேலையும் முட்டைகள் கொடுக்க ஏற்பாடு செய்தேன். இந்த இரவல் ஆளுநர் வேண்டுமா? வேண்டாமா? என்பதை அவர்கள் முடிவு செய்ய முடியாது.  என்னைப் பொறுத்தவரை நான் இரவல்  ஆளுநராக பணியாற்ற வில்லை, இறக்கம்  உள்ள ஆளுநராக பணியாற்றி இருக்கிறேன். 


 






 


மேலும் ஒரு காலத்தில் சூப்பர் முதலமைச்சர் என்று கூறினார்கள். தற்போது இரவல் ஆளுநர் என்று கூறுகிறார்கள் என்னை  பொறுத்தவரை இரக்கமுள்ள ஆளுநராக மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன்.  முழு நேர உரையை தெளிவாக தமிழில் வாசித்த பிறகு, பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமல்லாமல் திராவிட முன்னேற்ற கட்சியை சேர்ந்த சகோதரர்களும் என்னை பாராட்டினார்கள். கட்சி வேறுபாடு இன்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆகையால் புதுச்சேரி ஆளுநர் இரவல் ஆளுநர் அல்ல இறக்கம் உள்ள  ஆளுநர்,  கடுமையாக உழைக்கும் ஆளுநர், புதுச்சேரியை முன்னேற்ற துடிக்கும் ஆளுநர் ஆகும்.  குறிப்பாக தமிழ்நாட்டிற்குள் தமிழிசை வருவதை யாராலும் தடுக்க முடியாது.  என்னை வேண்டும் என்றாலும் சரி, வேண்டாம் என்றாலும் சரி , சமூக வலைதளங்களில் திட்டினாலும் சரி,  தமிழிசை தமிழ்நாட்டிற்கு வருவேன், வந்து கொண்டு தான் இருப்பேன் , அதை யாராலும் தடுக்க முடியாது" என்றார்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண