முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் வெதிருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேலசிந்தாமணி இ.ஆர்.மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் அவர்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் அவர்கள் பேசியது.. தந்தை பெரியாரின் மாணவராய், பேரறிஞர் அண்ணாவின் தம்பியாய், வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து தன் வாழ்நாளை அர்ப்பணித்து உயர்ந்த தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையால் அமைக்கப்பட்டு, 12 குழுக்களில் ஒரு குழுவான 'சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்ற விழாக்குழுவின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் குழுத்தலைவர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் மாவட்ட அளவில் 3 கல்லூரிகள், 3 பள்ளிகளும் மற்றும் மாநில அளவில் 100 கல்லூரிகள், 100 பள்ளிகள் என தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவில் இறுதிப்போட்டிகள் நடத்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி நடைபெற்று வருகிறது.




மேலும், இந்த அரங்கம் அற்புதமான பேச்சாளர்களை கொண்ட அரங்கமாக இந்த அரங்கம் உள்ளது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தினார்கள். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய சிறப்பு மிக்க உரைகளை இங்கு பேசிய மாணவ,மாணவிகள் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன். மேலும், வார்த்தைகளில் டாக்டர் கலைஞர் அவர்களை வெல்ல யாராலும் முடியாது. அவர்களை போற்றி பேசிய உங்களுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த கருத்தரங்கில், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்று மாவட்டத்திற்கும் உங்கள் பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.




திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கு பேச்சுப் போட்டியில் பங்கேற்ற 5 மாணவியர்களுக்கு பங்கேற்பு பாராட்டு சான்றிதழ்களையும் மற்றும் முதல் 3 இடங்களை (முதல் பரிசு ரூ.3,000/-, 2-ம் பரிசு ரூ.2,000/-, 3-ம் பரிசு ரூ.1,000/-) பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும்,  அரசு தலைமை கொறடா அவர்கள் வழங்கி பாராட்டினார்.


இதனைத் தொடர்ந்து, மேலசிந்தாமணி இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கு பேச்சுப் போட்டியில் பங்கேற்ற 5 மாணவ, மாணவியர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களையும் மற்றும் முதல் 3 இடங்களை (முதல் பரிசு ரூ.3,000/-, 2-ம் பரிசு ரூ.2,000/-, 3-ம் பரிசு ரூ.1,000/-) பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும்,  அரசு தலைமை கொறடா அவர்கள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.