திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் லால்குடி, முசிறி ,பேரூராட்சிகள் நகராட்சிகளாக  உருவாக்கம் குறித்து நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு  தலைமையில் ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் தொடர்பாக நடைபெற்ற  மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மற்றும் தரம் உயர்த்தப்படும் பேரூராட்சிகள் உடன் இணைக்கப்படும் ஊராட்சிகளின் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனிலும் விதிமுறைகளின் படியே முடிவு எடுக்கமுடியும் தேவையான ஊராட்சியை சேர்க்கவோ நீக்கவோ முடியாது ஒரு மைல்கலுக்கு   ஆயிரம் மக்கள் தொகை அல்லாத மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் விவசாயம் அல்லாத தொழிலில் ஈடுபட்டு இருந்தால் மட்டுமே ஊராட்சிகளை நகரத்தோடு இணைக்க முடியும். இப்போது இருக்கும் ஊராட்சி தலைவர்கள் உறுப்பினர்களுக்கு 2025 ஜனவரி வரை பதவி தலைவர்களின் செக் பவர் அப்படியே இருக்கும்.  மாநகராட்சியோடு சேர்த்துவிட்டால் வரிகள் அதிகரிக்கும் என்று வதந்திகளை பரப்பி வருகிறார்கள். குடிநீர் கட்டணமாக ஊராட்சியில் ரூபாய் 40 கட்டணம் வசூலிக்கப்படும், இந்நிலையில் மாநகராட்சியால் ரூபாய் 50 ஆகும். ஆனால் காவிரி குடிநீர் கிடைக்கும் வீடு வரி உயரும் என்ற வதந்தியும் உள்ளது. பழைய வரிகளில் மாற்றம் இருக்காது புதிதாக கட்டும் வீடுகளுக்கு மட்டும் தான் புதிய வரி விதிக்கப்படும் அதேபோன்று 100 நாட்கள் வேலைத்திட்டம் கிடையாது என்று கூறுகின்றனர், இப்போது தமிழக அரசு நகர புறங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதிலும் நம் மாவட்டத்தில் தகுதியான நகர பகுதிகளுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. 




மாநகராட்சியோடு  இணைக்கப்பட்டால்  நிலத்தின் மதிப்பு அதிகரிப்பதோடு, பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட வசதிகள் மேம்படும் ,சுதந்திரம் பெற்ற போது வெறும் 5 சதவீதமாக இருந்த நகரம் இப்போது 53 சதவீதமாக உயர்ந்துள்ளது வளர்ச்சியை நோக்கி செல்லும்போது சில இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் அதன் மூலம் பயன்கள்  அதிகமாக இருக்கும். விவசாயிகள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தியும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.மாநகராட்சியோடு  ஊராட்சிகளை  இணைத்தால் வளர்ச்சி பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியும் அதனால் அரசின் திட்டத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார். கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள், ஊராட்சி பகுதிகளில் மாநகராட்சி, நகரத்தோடு இணைப்பதே வரவேற்றனர்.ஆனால்  நவல்பட்டு, புங்கனூர், தாயனூர், கீழக்குறிச்சி, குண்டூர், திருவளர்ச்சி பட்டி ,கள்ளிப்பட்டி, மாடகுடி, ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் மக்கள் பேசுகையில் எங்கள் பகுதியில் விவசாய நிலங்கள், விவசாய தொழிலாளர்களும் அதிகம் உள்ளனர், மாநகராட்சியோடு  இணைத்தால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்  நிறுத்தபடுவதோடு, வரியினம்  அதிகரித்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும், அதனால் எங்கள் ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.




மேலும் நவல்பட்டு கிராமத்தில் விவசாயம் சார்ந்த பகுதி தனியாக இருப்பதால் அப்பகுதியையும், அதேபோன்று உள்ள மாதவப்பெருமாள் கோயில், புங்கனூர், ஆகிய பகுதிகளும் விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். மேலும் மாடக்குடி, திருவளர்ச்சி பட்டி, குண்டூர், பகுதிகளுக்கு விலக்கு அளிக்க வாய்ப்பே இல்லை, மக்களின் கோரிக்கைகளை அரசிற்கு  கருத்துக்களை சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளின்படி ஆய்வு செய்து அரசு ஆணை பிறப்பிக்கும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் கருத்துக்களை மாவட்ட ஆட்சியர் , நகரபுற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் எடுத்துரைத்தார். பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரிவாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, விரைவில் மாநகராட்சி விரிவாக்க பணிகள் முடிக்க வேண்டுமென அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.