Lok Sabha Election 2024: பாராளுமன்றத் தேர்தல் 2024, 16.03.2024 அன்று பிற்பகல் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அனைவரும் கட்டாயமாக விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், நகை மற்றும் வட்டி தொழில் செய்பவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.




திருமண மண்டபங்கள் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டியவை:


தனியார் நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நபர்களுக்கு மொய் என்ற பெயரில் பணமோ, பரிசு பொருட்களோ போன் போன்றவை இலவசமாக விநியோக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான இனங்கள் கண்காணிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். திருமண மண்டபங்களில் நாளது தேதியலிருந்து தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட்ட வட்டாசியரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். வாக்குபதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வெளியூர் நபர்களை மொத்தமாக தங்க அனுமதிக்க கூடாது. மேற்கண்ட நிபந்தனைகளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்புள்ளது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக ஒரே நாளில் மொத்தமாக சாப்பாடு, பிரியாணி போன்ற உணவுகளை அதிகமாக சமைத்து தேர்தல் நேரத்தில் விநியோகிக்க கூடாது. தேர்தல் விதிமுறைகளை திருமண மண்டப உரிமையாளர்கள் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 




தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டியவை:


தங்கும் விடுதிகளில் நாளது தேதியிலிருந்து தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட் வட்டாசியரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். வாக்குபதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வெளியூர் நபர்களை மொத்தமாக தங்க அனுமதிக்க கூடாது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணமோ அல்லது பரிசு பொருட்களையோ பதுக்கும் விதத்தில் செயல்படுவோரை கண்டறிந்து உடனடியாக தகவல் தெரிவித்திடல் வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.




வட்டிக்கு விடுவோர் மற்றும் நகை அடகு பிடிப்போர் கடைபிடிக்க வேண்டியவை:


எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் நகை அல்லது பத்திரத்தின் பேரில் கணிசமான ரொக்க தொகையினை வழங்கிடுவதற்கு முன்னர் அவர் அரசியல் அல்லது வேட்பாளர் தொடர்புடையவரா 61601 அறிவித்து கொள்ள வேண்டும். வாக்காளர்களை கவரும் விதத்தில் டோக்கன் விநியோகத்தின் மீது பணமோ அல்லது பொருளோ கொடுத்திடக் கூடாது. வாக்காளர்களை கவரும் விதத்தில் ஏற்கனவே அடகு வைக்கப்பட்ட நகைகளை இலவசமாக திருப்பி தருவதோ அல்லது சிறிய நகைகளுக்கு அதிக அளவு பணம் தருவதோ கூடாது. தோர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படை தன்மையுனும் உரிய விதிமுறைகளின் படியும் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு இனங்களும் அதற்குரிய பதிவேட்டில் சரியாக பராமரிக்ககப்பட்டு இருக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.


மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால். அச்சகங்கள், நகை அடகு பிடிப்போர் மற்றும் திருமணம், தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரம், தொழில் போன்றவற்றை செய்திட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் ,மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.