திருச்சி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முக்கிய அரசியல்க் கட்சியான அதிமுக, திமுக, பாஜக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 12 இடங்களில் போட்டியிடுகிறார்கள். கடந்த ஒரு வாரமாக வீதி வீதியாக சென்று மக்களின் இல்லங்களை தேடி துண்டு பிரசுரம் கொடுத்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் பல வேட்பாளர்கள் வித்தியாசமான, அதாவது சாலையை சுத்தம் செய்வது, சாக்டையை சுத்தரம் செய்வது, டீ கடையில் சென்று டீ போடுவது , வித்தியாசமான வாக்குறுதிகளை கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் நடிகர் விஜயின் உருவ படம் பொருந்திய கொடியை வைத்து வாக்கு சேகரித்தனர். இதனை தொடர்ந்து எம்ஜிஆரின் ஆட்சியை விஜய் தான் மீண்டும் கொண்டு வருவார் என்று வெளிப்படுத்த எம்.ஜி.ஆர் வேடமணிந்து விஜய் மக்கள் இயக்கம் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்தனர்.




திருச்சி மாவட்டம் 36-வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் அருள்ராஜ் ‌ போட்டிருக்கிறார் - இந்நிலையில் இவர் நடிகர் விஜய் அடுத்த எம்ஜிஆர் போன்று தமிழகத்தை ஆட்சி செய்வார் என்ற எண்ணத்தை வெளிப்படுத்த எம்ஜிஆர் வேடம் அணிந்த நபரைக் கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரம் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது . மேலும் வார்டுகளில் உள்ள பிரச்சனைகளை உடனடியாக் தீர்த்து வைக்கபடும், நான் உங்களில் ஒருவன் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என்றனர். குறிப்பாக விஜய் அவர்களின் ஆசிபெற்ற வேட்பாளர் நான், ஆகையால் அன்ணனின் ஆணைபடி மக்களுக்காக சேவை செய்வேன் என்று வாக்குறுதிகளை கொடுத்து தீவிர வாக்கு சேகரித்தனர்.


 






 


இதேபோன்று திருச்சி மாநகராட்சி 5 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முத்துகுமார் திருவானைக்காவல் பகுதியில்  உள்ள அழகிரிபுரம் சென்னை-திருச்சி டிரங்க் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் மேலும்  கொள்ளிட படித்துறையில் சலவை தொழிலாளர்களிடம்  வாக்கு சேகரித்தார் அப்போது அவர் சலவை தொழிலாளர்களிடம் இருந்த சலவை துணிகளை எடுத்து துவைத்து நூதன முறையில் சலவை தொழிலாளர்களிடம்  தாமரை சின்னத்தின் வாக்கு சேகரித்தார். மேலும்  மத்திய அரசின் திட்டங்களை சலவை தொழிலாளர்களிடம் எடுத்து கூறி மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்திட உள்ளாட்சி தேர்தலில் இருந்தே அடித்தளமாக அமைத்து நாங்கள் பணியாற்ற எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டுகொண்டார்.