திருச்சி மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் பல்வேறு தொழில்நுட்பம் பொருந்திய நகரமாக மாற்றுவதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாலைகளை மேம்படுத்துதல், தொழில்நுட்ப பூங்காக்கள் அமைத்தல், வணிக வளாகங்கள் அமைத்தல், புராதான சின்னங்களை அழகுபடுத்தி மேம்படுத்துதல் போன்ற பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய செயல்பாடுகள் குறித்த விளக்க கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகராட்சி நகர பொருளாளர் அமுதவல்லி தலைமை வகித்து, மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான  'ஸ்மார்ட் திருச்சி' என்ற புதிய இணையதளம் செயலியை தொடங்கி வைத்து பேசினார், மாநகராட்சியின் பல்வேறு சேவைகளை கண்காணிக்கவும் அது தொடர்பான குறைகளை கண்டறிந்து அவற்றை திறம்பட சீரமைக்க உத்தரவுகளை பிறப்பிக்கும் வகையிலும் இம்மையம் செயல்படும்.




அதற்காக மாநகராட்சியில் குடிநீர் வினியோகத்தை கண்காணித்து முறைப்படுத்த ஸ்கேடா தொழில்நுட்பம் ஆன்லைன் மூலம் தெருவிளக்குகள் பராமரிப்பு, அரியமங்கலம் குப்பை கிடங்கை சுத்தப்படுத்தும் பயோ மைனிங் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் இணையத்தோடு இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இவை தொடர்ந்து தனியே செயல்படும் காவல்துறை தீயணைப்பு உள்ளிட்ட அரசு துறைகளும் இம்மையத்துடன் இணைக்கும். இதன் மூலம் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் அதிகாரிகள் கண்டறிந்து அவற்றை கண்காணித்து தீர்வு காணமுடியும். இதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது விரைவில் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.


 


ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் பணிகள் ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் பேசுகையில் இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் திருச்சி இன்  என்ற இணையதளம் மற்றும் செயலி மூலமாக மக்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.மேலும்  ஒரு வாரத்தில் ப்ளே ஸ்டோரில் இச்செயலி வெளியிடப்படும். இம்மையத்தின் கீழ் வைபை வசதி, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், அவசர தொடர்பு வசதி, சென்சார் வசதி, ஆகியவை கொண்ட எல்இடி ஸ்மார்ட் கம்பங்கள் சத்திரம், மத்திய, பேருந்து நிலையங்கள், தென்னூர்  அண்ணாநகர் அறிவியல் பூங்கா ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டு அவையும் மையத்துடன் இணைக்கப்படும்.




மேலும் திருச்சி மாநகர் தொடர்பான பல்வேறு தகவல்களை மக்கள் தெரிவிக்கவும், நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பும் வகையில் சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையங்களில் டிஜிட்டல் டிஸ்பிளே போர்டு கொள்ளும் அமைக்கப்பட உள்ளன. இது தவிர வரும் காலங்களில் மாநகரில் காற்றின் தரம், மழையின் அளவு, போன்ற நிகழ்வுகளும் கண்காணிக்க ஏற்படுவதோடு வெள்ளம் மற்றும் சூறாவளி போன்ற பேரிடர்களின் போது ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையிலும் இம்மையம் முழுமையாக வருங்காலங்களில் உருவாக்கப்படும் என்றார்.