'கேரளா ஸ்டோரி' படத்தை தமிழகத்தில் உடனடியாக தடை செய்ய வேண்டும் - நெல்லை முபாரக்

ஆளுநர் இல்லாத தமிழகத்தை நோக்கி தமிழக மக்கள் முன்னேறி கொண்டிருக்கிறார்கள் - எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி

Continues below advertisement

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக  முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் மாநில தலைவர் கிண்டி அன்சாரி தலைமை தாங்கினார். மேலும் மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் ஜாஃபர் அலி உஸ்மானி துவக்கவுரை நிகழ்த்தினார். மேலும், இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எம்.ரஃபீக் அகமது, அப்துல் ஹமீது, மாநில செயலாளர் ரத்தினம், வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர்கள் கலீல் ரஹ்மான், பாத்திமா ஸ்டீல் முகைதீன், ஜோதி பேக் அஜ்மல் கான், மாநில பொருளாளர் அன்சர் குரூப் அப்துல் சமத், மாநில செயலாளர்கள் அப்துல் கரீம், அரபாத், லோகநாதன், கமால் பாட்ஷா, ஸலாஹூத்தீன், எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர்கள் அம்ஜத் பாஷா, ஹஸ்ஸான் பைஜி, வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் சாதிக், சேக் சாலி, குடந்தை இப்ராஹீம், திருச்சி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக், திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலைவர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநாட்டில் வணிகர்கள் நலன் சார்ந்து பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Continues below advertisement


மத்திய அரசின் தவறான அதிகப்பட்ச வரிவிதிப்புக்கொள்கையால் இந்தத்துறை முழுமையாகவே சீரழிந்துவிட்டது. கொரோனா பெருந்தொற்று மற்றும் அதிகப்படியான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் சிறுகுறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  பல்லாயிரக்கணக்கான உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி இழந்தும் இருப்பதால் இவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. அரசு இந்த துறையை தக்க வைப்பது மட்டுமல்ல, அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது. எனவே, ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. மூலமாக பெறும் அதிக அதிகப்பட்ச வரிவிதிப்பை பரிவுடன் பரிசீலித்து மறுபரிசீலனை செய்து, குறைந்தபட்ச வரிஅமைப்பாக மாற்றி அமைத்து, நாட்டின் 60% சதவீதத்திற்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை செழுமைப்படுத்தித் தரும்படி இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுகுறு தொழில்களின் வங்கிக் கடன்களை ரத்து செய்வதோடு, அந்த துறையை பாதுகாக்க புதிய வங்கிக் கடன்களை எளிய முறையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக்  பேசுகையில், கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கேரள மாநிலம் தடை செய்யும் வரை காத்திருக்காமல் தமிழக அரசு இந்தப் படத்தை திரையிடுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். கேரளா ஸ்டோரி  திரையிடப்படும் திரையரங்கம் முன்பு கண்டிப்பாக போராட்டம் நடத்துவோம் என்றார். மேலும் தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் தொடர்ந்து  அரசியல், தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார், இதை கண்டிக்கிறோம். உடனடியாக தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பாஜகவுடன் இணைந்து அரசியல் பேச தொடங்கலாம், தவிர ஆளுநர் பதவியில் இருந்து பேசுவது அநாகரிகம் அற்ற செயல் ஆகும்.  ஆளுநர் இல்லாத தமிழகத்தை நோக்கி தமிழக மக்கள் முன்னேறி கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். ஆனால் அவருடைய திட்டங்களுக்கு அரசு அதிகாரிகள் உறுதுணையாக இல்லை என்பதே தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. ஆகையால் அரசு அதிகாரிகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் மக்களுகான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கையை வைத்துள்ளார். 

தமிழ்நாட்டில் சிறு குறு வணிகர் மீது அடாவடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எங்கள் கட்சி சார்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறோம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் உரிய அறிவிப்பினை நிச்சயமாக அறிவிக்கப்படும். குறிப்பாக பாஜகவை தமிழகத்தில் நுழையவிடாமல் இருப்பதற்காக எந்த திட்டங்களையும் நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola