கரூர் மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக மாவட்ட காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை பாராட்டும் விதமாக தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வாரத்தில் கரூரில் செய்தியாளர் சந்திப்பின்போது கரூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கடந்த ஆட்சி காலத்தில் இருந்த கடைகள் கஞ்சா விற்பனை, லாட்டரி சீட்டுகள் உள்ளிட்ட சட்டத்திற்குப் புறம்பான இயங்கிவந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து தற்போது கரூர் மாவட்டத்தில் முற்றிலும் குற்றச்செயல்கள் எடுக்கப்பட்டு வருவதாக அப்போது கூறினார் அதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு அவர்கள் தலைமையில் நாள் தோறும் மாவட்ட எல்லைகளில் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் காவலர்கள் மாறி மாறி வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி இருந்தார்.




கரூர் மாவட்டத்தில் மூன்று முக்கிய மண்டலங்களாக பிரித்து அதில் 17 நகர காவல்நிலையத்திற்கு நாள்தோறும் இரண்டு காவலர்கள் வீதம் இரவு ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படி கரூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுத்து கொண்டு வரும் நிலையில் போலீசார் சோதனை சாவடியில் கரூரில் வெளி மாவட்டங்களிலிருந்து கலப்பட டீசலை டேங்கர் லாரியில் வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த டேங்கர் லாரியை போலீசார் சோதனைகள் கைப்பற்றி ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.


கரூர் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில்காலை 10.30 மணி அளவில் செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது சுக்காலியூர் சரவணா மெடிக்கல் அருகில் உள்ள காலி இடத்தில் நின்று கொண்டிருந்த TNS2 A9992 மற்றும் TN88 H1185 என்ற பதிவு எண் கொண்ட இரண்டு டேங்கர் லாரிகளின் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அங்கு சிலர் உலாவிக் கொண்டிருந்தனர்.



இதனை ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கரூர் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த நாட்ராயன் மகன் ராஜா என்பவர் என தெரியவந்தது. பிறகு அவரை விசாரணை செய்தபோது வெளிமாவட்டங்களில் இருந்து கள்ளத்தனமாக கலப்பட டீசலை குறைந்த விலைக்கு வாங்கி கள்ளச் சந்தையில் விற்று வருவதும் தெரியவந்தது. இந்த விசாரணையில் அடிப்படையில் அங்கு நின்று கொண்டிருந்த டேங்கர் லாரிகளின் உரிமையாளரான ராஜ் கண்ணன், மோகன்ராஜ் ஆகியோரிடம் நடத்திய விசாரணையின் பேரில் டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்தனர். 


குறைந்த விலைக்கே கள்ளச்சந்தையில் டீசலை வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பெறும் நோக்கோடு செயல்பட்டு வந்ததாக தெரிய வந்துள்ளது என போலீசார் விசாரணையில் தெரிவித்தனர் இந்த டேங்கர் லாரியில் இருந்த 7,000 லிட்டர் கலப்பட டீசரையும் கைப்பற்றி மேற்படி ராஜா என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.




கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறைந்து வரும் நிலையில் தற்போது வெளி மாவட்டத்தில் இருந்து கள்ளச் சந்தையில் குறைந்த விலைக்கு டீசலை வாங்கி அதிக விலைக்கு டீசலை விற்று சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்துவிட்டு வந்த டேங்கர் லாரி ஓட்டலை கைது செய்த போலீசார் இது சம்பந்தமாக மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.