தமிழகத்தில் ஜல்லிகட்டு போட்டி என்றாலே அலங்காநல்லூர், பாலமேடு, உள்ளிட்ட சில இடங்கள் தான் பொதுவாக மக்களுக்கு தெரியும். ஆனால் திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடம் தான் சூரியூர் ஆகும். இங்கு நடைபெறும் ஜல்லிகட்டு போட்டியில் பங்கேற்க பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அந்த சூழ்நிலையில் அப்பகுதி முழுவதும் விழாகோலாமாக காட்சியளிக்கும். இந்நிலையில் இந்தாண்டு நடைபெற உள்ள ஜல்லிகட்டு போட்டியை முன்னிட்டு திருவெறும்பூர் அடுத்துள்ளது சூரியூர். இங்கு ஆண்டுதோறும் நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவையொட்டி மாட்டுப்பொங்கல் அன்று 16-ந்தேதி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தப்படும். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் சூரியூர் ஜல்லிக்கட்டு பிரசித்திபெற்றது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் அமைக்கும் பணி, ஜல்லிக்கட்டு திடல் அமைக்கும் பணி, பார்வையாளர்கள் அமர்வதற்கான இடம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.
இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் பெரம்பலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஜல்லிக்ட்டில் வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் சார்பில் மொபட், தங்க நாணயம், வெள்ளி பொருட்கள், டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில் ஆய்வுக்கு வந்த கலெக்டர் பிரதிப்குமார், சூரியூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் விழா கமிட்டியினர், கிராம பட்டையார்கள் மற்றும் பொதுமக்களிடம் ஜல்லிக்கட்டு தொடர்பாக கலந்தாலோசித்தார். ஜல்லிக்கட்டில் காளைகளை துன்புறுத்தக்கூடாது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இதற்கிடையில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்