தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பாலின் விலை குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆட்சி பொறுப்பு வந்த உடனே தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆவின் பால் விலை ரூபாய் 3, குறைத்து கோப்புகளில் கையெழுத்துயிட்டார். இதன் பிறகு  தமிழகம்  முழுவதும் ஆவின் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 36 லட்சம் லிட்டர் பாலை தினசரி கொள்முதல் செய்து வந்தது. கொரானாவை முன்னிட்டு சில தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதலை நிறுத்திய நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, பேரிடர் காலத்திலும் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாத வகையில், அவர்களிடம் இருந்து மொத்த பாலையும் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது தமிழகத்தில்  40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தினசரி பால் விற்பனை 24 லட்சம் லிட்டராக இருந்தது. ஆவின் பாலின்  விலை குறைக்கப்பட்ட பின்னர் தற்போது 26 லட்சம் லிட்டர் வரை விற்பனை உயர்ந்துள்ளது. மேலும்,  கடந்த மே 23-ம் தேதி சென்னையில் 15.04 லட்சம் லிட்டர் ,மற்றும் பிற மாவட்டங்களில் 12.59 லட்சம் லிட்டர் பால் விற்கப்பட்டு வருகிறது. 




மேலும் ஆவின் பால் விலை ரூ. 3 குறைத்த பிறகு திருச்சி மாவட்டங்களில் தினசரி 5 ஆயிரம் லிட்டர் கூடுதலாக விற்பனை நடைபெறுவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாதந்திர கார்டு தாரர்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரம் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் வாக்குறுதி அளித்தபடி ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து உத்தரவிட்டார். இது கடந்த மே மாதம் 16ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி சமன்படுத்தப்பட்ட பால் 1000 எம்எல் (டிஎம்) ரூ.43 லிருந்து ரூ.40, 500 எம்எல் (டிஎம்) ரூ.21.50லிருந்து ரூ.20, நிலைப்படுத்தப்பட்ட பால் 500 எம்எல் (எஸ்எம்) ரூ.23.50லிருந்து ரூ.22, நிறை கொழுப்பு பால் 500எம்எல் (எப்சிஎம்) ரூ.25.50லிருந்து ரூ.24 ஆக, இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 500 எம்எல் (டிடிஎம்) ரூ.20 லிருந்து ரூ.18.50, டீமேட் 1000 எம்எல் ரூ.60லிருந்து ரூ.57 ஆகவும் குறைக்கப்பட்டது. இதேபோல் பால் அட்டை விலை குறைப்பு பட்டியலின்படி சமன்படுத்தப்பட்ட பால் 1000 எம்எல் (டிஎம்) ரூ.40லிருந்து ரூ.37, சமன்படுத்தப்பட்ட பால் 500எம்எல் (டிஎம்) ரூ.20லிருந்து ரூ.18.50, நிலைப்படுத்தப்பட்ட பால் 500எம்எல் (எஸ்எம்) ரூ.22.50லிருந்து ரூ.21, நிறை கொழுப்பு பால் 500எம்எல் (எப்சிஎம்) ரூ.24.50லிருந்து ரூ.23, இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 500 (டிடிஎம்) ₹19.50லிருந்து ₹18 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் இந்த விலை குறைப்பு காரணமாக திருச்சி மாவட்டங்களில் தினசரி 5 ஆயிரம் லிட்டர் கூடுதலாக விற்பனையாவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி மாவட்டத்தில் 280 மேற்பட்ட ஏஜெண்டுகள் பால் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. திருச்சியில் விலை குறைப்புக்கு முன்பாக தினசரி 1.18 லட்சம் லிட்டர் பால் விற்பனையானது. தற்போது தினசரி 1.23 லட்சம் லிட்டர் முதல் விற்பனையாவதாக திருச்சி மாவட்ட ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி திருச்சியில் மட்டும் தினசரி 5 ஆயிரம் கூடுதலாக விற்பனையாகிறது. மேலும் ஆவின் பால் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மே 16ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை திருச்சியில் மொத்தம் 75 ஆயிரத்து 840 கார்டுகள் இருந்தன. இந்நிலையில் ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை கார்டுகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 240 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி கார்டுகளின் எண்ணிக்கையும் 5 ஆயிரம் உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.