திருச்சி மாநகரில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் தொற்று உறுதி செய்யபடுகிறது. மேலும் மக்கள்  சோதனை செய்த பிறகு, வீட்டு தனிமைப்படுத்தலை விரும்புவதால் திருச்சி நகரில் மருத்துவமனை படுக்கைகளின் தேவை குறைவாகவே உள்ளது என அதிகாரிகள் கூறுகிறார்கள். குறிப்பாக நகரத்தில் உள்ள மொத்த நோயாளிகளில் 83% பேர் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் அல்லது கோவிட் பராமரிப்பு மையங்களில் உள்ளனர். ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருச்சி நகரில் கடந்த இரண்டு நாட்களில் 140, மற்றும் 191 போன்ற எண்ணிக்கையில் புதிதாக பாதிக்கபட்டவர்கள் உள்ளனர். மேலும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஜனவரி 10 ஆம் தேதி வரை 811 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பெரும்பாலானோர் தொற்று உறுதி செய்யபட்டால்  தங்களை வீட்டில் தனிமைபடுத்திகொள்வதை விரும்புகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Continues below advertisement

கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டவர்களுக்கு அறிகுறியற்றவை  அல்லது லேசான அறிகுறிகள் உள்ளன. இதுபோன்ற பாதிப்பு உடையவர்களை வீட்டில் தனிமைப்படுத்த திருச்சி மாநகராட்சி அனுமதித்தது. முடிவுகள் வந்த நான்கு மணி நேரத்திற்குள் மருத்துவகுழுக்கள்  நோயாளிகளைத் தொடர்பு கொள்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும் ஆறு மணிநேரங்களில்  அவர்கள் மருத்துவமனையில் அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தனி அறைகள் மற்றும் முகக்கவசம் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். மேலும் ஆக்சிஜன் அளவு குறைந்தால்  நோயாளிகள் உடனடியாக மருத்துவ நிபுணர்களை கலந்தாலோசிக்க வேண்டும்  என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா தடுப்பூசி நோய் தொற்றுகளின் தீவிரத்தை குறைத்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே, புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 80% தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கபட்டவர்களை  கோவிட் -19  கண்காணிப்பு அறையில் 18 சுகாதார குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறினார்.

Continues below advertisement

திருச்சி மாவட்ட நிர்வாகத்தில் 7.5% பேருக்கு ICU வசதி தேவைப்படுகிறது. 2.5% பேருக்கு வென்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் பதிவானதை விட, 20 மடங்கு புதிய பாதிப்புகள் அதிகரித்து வருவதால், நோய் பரவலை தடுக்க, ரேண்டம் மாதிரி ஆய்வு செய்ய, மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கணிசமான மக்கள் வருகையை பதிவு செய்யும் சந்தை இடங்கள் மற்றும் வணிக வீதிகள் ஆர்டி பிசிஆர் சோதனைகளுக்கான ரேன்டோம் ஸ்வாப் சேகரிப்பின் கீழ் உள்ளடக்கப்படும். மேலும் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் வந்து செல்வதால், காந்தி மார்க்கெட் பகுதியிலும், வணிகத் தெருக்களிலும் ஆட்களை தற்செயலாக சோதனை செய்ய தொடங்குவோம். மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என மாவட்ட ஆட்சியர்.சிவராசு தெரிவித்துள்ளார்.