திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள ஆவின் பால் பண்ணையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கண்டார். இதனை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள்  73 பயனாளிகளுக்கு ரூபாய் 4 கோடி 75 லட்சம் மதிப்பிலான கறவை மாடு வளர்ப்பதற்கான கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கினார். தொடர்ந்து பால் உற்பத்தி மற்றும் தரம் குறித்ததான பால்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் காலம் நேரத்தை கணக்கிடாமல் உரிய விலை கொடுக்கப்பட வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு தரமான பாலை, பால் பொருட்களை  வழங்க வேண்டும் என்ற தலையான பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்குரிய நல்ல கட்டமைப்பு ஆவினில் இருக்கிறது. கடந்த நாட்களில் மக்கள் சேவையை பாராட்டி உள்ளனர். சுமார்  22 லட்சமாக இருந்த கொள்முதல் தற்பொழுது 30 லட்சத்துக்கு உச்சத்திற்கு மேலாக உள்ளது. ஒரு நாட்களில் அதிக அளவு பயன்படுத்துவதற்கான திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். தமிழக முதல்வரும் திட்டங்கள் அனைத்தும் விவசாய பெருங்குடி மக்களுக்கு சென்றடைய வேண்டும் அதன் மூலமாக பால் உற்பத்தி பெருக வேண்டும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.




இதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பால் உற்பத்தியாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய கடன்களை வேளாண் வங்கிகள் மூலமாக, தேசிய வங்கிகள் மூலமாக கடன் வழங்கவும் மானியம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்று கூட சுமார் 4 கோடிக்கு மேல் நலத் திட்டங்களை வழங்கி இருக்கிறோம். எனவே வருகிற நாட்களில் ஆவின் மிகப்பெரிய அளவில் கட்டமைக்கப்படும். மேலும், . அத்தியாவசியமாக தேவைப்படுகிற இடங்களுக்கு சில மாற்றங்களை கொடுத்திருக்கிறோம். வெகு விரைவில் சீர் செய்யப்படும். குறிப்பாக தனியார் பால் கொள்முதல் என்பது  பேராபத்தானது, அவர்கள் எந்தவிதமான முறையான அனுமதியும் பெறவில்லை, தரங்களையும் கடைப்பிடிப்பதில்லை. மேலும் அவர்கள் கலப்படம் செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அப்படி உள்ள நிறுவனங்களை தடை செய்யக்கூடிய பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே தரத்தை கண்டறிந்து அதற்குரிய விலை கொடுப்பதற்கான நீண்ட நாள் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்” என்றார்.




மேலும், அமுல் பால் நிறுவனம் பால் கொள்முதல் தொடர்பான கேள்விக்கு?, “பொதுத்துறை நிறுவனத்தில் உங்களுக்கும் எனக்கும் பங்கு உள்ளது. ஒரு நிறுவனத்தை பார்த்து பயப்படக்கூடிய அரசு தமிழக அரசு இல்லை வலுவான கட்டமைப்பு ஒன்று உள்ளது. எங்களுடைய பால் கொள்முதல் இடத்தில் மற்றொருவர், வருவது மரபு அல்ல. ஆவின் பலமான கட்டமைப்பு உள்ளது. தற்போது ஆவின் பாலின் விற்பனையும் அதிகரித்துள்ளது. யாரும் பேசக்கூடிய அளவுக்கு அச்சப்படுற அளவுக்கு இல்லை” என தெரிவித்தார். இந்நிகழ்வில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரீதீப்குமார், பால்வளத்துறை மேலான் இயக்குனர் திலீப் மற்றும் துறை  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.