தமிழ் சினிமாவில் அங்காடித் தெரு, வெயில், போன்ற  வெற்றி படங்களின் இயக்குனர் வசந்தபாலன் திருச்சியில் நடைபெற்ற தனியார் மருத்துவமனையில்  புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது மேடையில் பேசிய அவர்.. நம் நாடு புகையிலை பழக்கத்தால் அழிந்து வருகிறது. இதில் இருந்து அனைவரும் மீட்கபட வேண்டும். மருத்துவதுறை என்பது புணிதமான துறையாகும். இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 


ஒரு கவுன்சிலர் பதவிக்கு 5000 ரூபாய் கூட சம்பளம் வரவில்லை என்கிறார்கள். ஆனால் அதற்கு 6 லட்சம் வரை செலவு செய்யக்கூடிய அரசியல்வாதிகள் இருக்கும் நாட்டில், இன்று மருத்துவ துறையும், நீட் போன்ற தேர்வுகளால் மிகவும் விலை உயர்ந்த துறையாக மாறிக் கொண்டு வருகிறது.


இந்தியா முழுவதும் நீட் தேர்வு பற்றிய விளம்பரம் இல்லாத மாநிலமோ? சாலைகளோ? இல்லை நீட் தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் தயாராகி வருகிறார்கள். 




சேவை மனப்பான்மை உள்ள ஒரு மருத்துவரை இந்த நாடு இழந்து விடுவோமோ என்று வருத்தம் அளிக்கிறது.


இன்றைய காலகட்டத்தில் 5 லட்சம் ரூபாய் சேர்த்து கட்டி விடுங்கள், 12-ம் வகுப்பு முடிந்தவுடன் உங்கள் மகனை நீட் தேர்வுக்கு அனுப்பி விடுகிறோம் என்கிறார்கள். அப்போது அந்த மாணவனின் மனது என்ன சொல்லும்   இப்போது 5 லட்சம் கொடுத்தால் பின்னாளில் 50 லட்சமாக சம்பாதித்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது என்ற கவலை  இப்போது எனக்கு வருகிறது .


12 ஆம் வகுப்பு படிக்கும் போதே இந்த 5 லட்சத்தை 500 மடங்கு ,1000 மடங்கு என ஒரு வியாபாரியை  இந்த சமூகம் மற்றும் அரசியல் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.


ஒரு கிராமத்தையோ, சென்னையையோ விட்டு திருச்சி போன்ற நகரங்களில் இவ்வளவு பெரிய மருத்துவமனையை கட்ட வேண்டும் என்ற சேவை மனப்பான்மை உள்ள ஒரு மருத்துவரை இந்த நாடு இழந்து விடுவோமோ என்று வருத்தம் அளிக்கிறது.


சேவை செய்கிற மருத்துவரை இனி வரும் காலகட்டத்தில் நாம் இழந்து விடுவோமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது 




சமீபத்தில் பிரதமர் மோடி காந்தியை பற்றி பேசிய விமர்சனத்திற்கு - இயக்குனர் வசந்தபாலன் பதில்


காந்தியை பத்தி சொல்கிறார்கள் ,காந்தி படம் பார்த்து தான் தெரியும் என்று ஆனால் காந்தி யார் என்பது நமக்குத் தெரியும்.


புகையிலை மிகப் பெரிய சமூக சீர்கேடுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது பத்திரிகைகளில் பின்னால் ஜாதி பெயர் போடும் அந்த நஞ்சை விரட்டி விட்டோம். அதேபோல் தொடர்ந்து கவிதைகள் ,தொடர் கதைகள், சமூக வலைதளங்கள், ரீல்ஸ் மூலம் என விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த புகையிலை என்ற நஞ்சை இந்த சமூகத்தை விட்டு விரட்டி அடிப்போம் என்றார்.


நான் ஒரு கலைஞனாக இருக்கும்போது என்னுடைய படைப்பை நேர்மையாக எடுத்துச் செல்ல வேண்டும். நேர்மையாக மக்களிடம் பேச வேண்டும். இந்த துறை வியாபாரம் சம்பாதிக்கக்கூடிய துறையாக இருந்தாலும், மக்களிடையே நேர்மையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று எனக்கு எப்போதுமே தோன்றும். 




புகையிலை தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது - இயக்குனர் வசந்தபாலன் 


நானும் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தேன். என் திருமணத்திற்கு பிறகு சில காரணங்களால் முழுமையாக நிறுத்தி விட்டேன். இப்படி ஒரு காலகட்டத்தில் தான் இயக்குனர் சங்கரை சந்திப்பதற்காக நான் நேரில் செல்கிறேன். அப்போது அவர் ஜென்டில்மேன் படம் எடுத்துக் கொண்டு இருந்தார். நான் என்னுடைய படிப்புச் சான்றிதழ் மற்றும் எனக்கு கவிதை, கதை எழுதும் திறன் உள்ளது என்று அவரிடம் நான் கூறுகிறேன்.


நீ கவிதை எழுதுவியா அல்லது மற்றவர்கள் கவிதையை சொல்வாயா? என என்னிடம் கேட்டார்.


அப்போது அவர் நாற்காலியில் அமர்ந்து புகை குடிக்க ஆரம்பித்தார். இப்போது கவிதை எழுது என்று சொல்கிறார்  நான் அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். புகையிலை பற்றிய ஒரு கவிதை எழுதினேன். அதை படித்து பார்த்துவிட்டு நீ என்னையவே கிண்டல் செய்கிறாயா என்று என்னிடம் கேட்டார்.


எனக்கு கவிதைக்கான பொருள் புகையிலை தான் தெரிந்தது சார், அதனால் தான் நான் எழுதினேன் என்று சொன்னேன். எனக்கு தொழில் கொடுத்தது என்னை வாழ்க்கையை மாற்றியது புகையிலை தான் என்பது உண்மை என தெரிவித்தார்.