நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு பேசியது... நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் அவர்களோடு இணைந்த கட்சிகள் கூட்டணி ஒரு பக்கமும், தி.மு.க.வோடு, காங்கிரஸ், 2 கம்யூனிஸ்டு கட்சிகள், 2 முஸ்லிம் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியை அப்படியே தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலமைச்சர் அரவணைத்து செல்கிறார். இந்த கூட்டணியில் கூடுதலாக எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கூட வரலாம். அது தேர்தல் நேரத்தில் தான் தெரியும். தற்போது கவர்னருக்கான தகுதியை விட்டு திராவிடமாடல் 50 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டது என்று அரசியல் வாதியை விட மோசமாக பேசி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பினால் 17-க்கும் மேற்பட்ட திட்டத்துக்கு அனுமதி அளிக்காமல் வைத்து இருக்கிறார். இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்று அ.தி.மு.க.வை கையில் வைத்து கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்