திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தினமும் காலை எழுந்த உடனே வேலைக்கு தயாராகி, ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருக்கும் மக்களின் மனமகிழ்ச்சி மற்றும் புத்துணர்விற்காக வயது வரம்பின்றியும், பாலின பேதமின்றியும் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், உதகை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் காவல்துறை சார்பாக விழிப்புணர்வு மனமகிழ் நிகழ்ச்சி '(Happy Street)' என்ற நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதேபோல் திருச்சி மாநகரத்தில் வசிக்கும் பொதுமக்கள், விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் வருகின்ற 23.07.2023-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6 am to 10 am வரை திருச்சி நீதிமன்றம் MGR சிலை அருகில் Student Road - ல் "மனமகிழ் நிகழ்ச்சி" "Happy Salai" Young Indians என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருச்சி மாநகர காவல்துறை சார்பாக நடைபெற உள்ளது.






இந்நிகழ்ச்சியில், Drone Shows, குழந்தைகளுக்கான விளையாட்டு திருவிழா (Kids Carnival), Zumba, மூத்த குடிமக்கள் கார்னர் (Senior Citizen Corner), செல்லப்பிராணிகள் கண்காட்சி (Pot Shows), ஆட்டம் பாட்டம் (Dance Jocky), உடல் பரிசோதனைகள் (Health Screening), உணவுகள் விற்பனையகம் (Food Stalls) மற்றும் காவல்துறை சார்பில் ஆயுத கர்காட்சி, போலீஸ் இசை குழு (Police Band Music), காவல்துறை துப்பறியும் மோப்ப நாய்படை கண்காட்சி மற்றும் பயனுள்ள பொருள்கள் விற்பனையகம் (Stalls) என 30க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாநகரில் உள்ள பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வருகை புரிந்து மகிழ்ச்சியாக இருக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பாக அன்போடு அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் திருச்சி மாநகர பொதுமக்களிடையே சாலை மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்தும், மது மற்றும் போதை பொருள் பழக்க வழக்கங்களிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேற்கண்ட நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவும், கண்டுகளித்து பயன்பெற திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர்.



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண