தமிழ்நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி கடந்த சில நாட்களாக ரூ.120 யை கடந்து விற்பனை ஆகிறது. தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகரித்து வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையைத் தொடங்கிய தமிழக அரசு, முதல் கட்டமாக பசுமை காய்கறிகடை, உழவர் சந்தை உள்ளிட்ட சில இடங்களில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யபட்டு வருகிறது. இந்த சூழலில் பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும், பருப்பு வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கஷ்டபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருச்சியில்  தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து திருச்சி புறநகர் மற்றும் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் திமுக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பட்டது. 




திருச்சி தெற்கு வடக்கு மற்றும் மாநகர் புறநகர் இணைந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை பகுதியில் மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி, வளர்மதி, பூனாட்சி, மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா குமார், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர் ரத்தினவேலு  மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு திமுக அரசிற்கு எதிராக முழக்கம் இட்டனர். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை அதிகரித்து கொண்டே இருந்தால், தமிழக மக்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் கோஷமிட்டனர். மேலும் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களுக்கு செய்யகூடிய திட்டங்கள் எதுவும் முறையாக சென்றடையவில்லை. குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை எதையும் செயல்படுத்த வில்லை என குற்றம்சாட்டினர். ஆனால் இந்த அரசு பணத்தை எப்படி சம்பாதிப்பது, ஊழல் செய்வது என முனைப்பில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஆகையால் தான் ED சோதனையில் அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் மாட்டிக்கொண்டுள்ளனர். இந்தநிலை தொடர்ந்தால் விரைவில் திமுக ஆட்சி அகற்றபட்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வரும், அப்போது மீண்டும் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்று எடப்பாடி. பழனிசாமி தலைமையில் விரைவில் ஆட்சி அமையும் என்றனர். தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என கோஷமிட்டனர். 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.