திருச்சி ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையரகம் ஜூலை (1-ந்தேதி) 5-வது ஜிஎஸ்டி தினத்தை கொண்டாபட்டது, என ஆணையர் பத்மஸ்ரீ தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருச்சி ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையரகம் கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.1,487 கோடி வரி வருவாயை ஈட்டியுள்ளது. இதில் ரூ.60 கோடி அதாவது 2020-21 நிதியாண்டுடன் (ரூ.1,428 கோடி) ஒப்பிடும் போது 4 சதவீதம் அதிகமாக ஈட்டியுள்ளது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடு மண்டல வருவாய் ரூ.41,090, அதில் ரூ.1,487 கோடி (4 சதவீதம்) திருச்சி ஜிஎஸ்டி ஆணையரகம் பங்களித்துள்ளது. திருச்சி ஆணையரகம் ரொக்கமாக நடப்பு நிதியாண்டில் 2022-23 ஜூன் 30, 2022 வரை ரூ.461 கோடி வரி வருவாயை ஈட்டியுள்ளது. இதில் ரூ.94 கோடி அதாவது கடந்த நிதியாண்டில் (ரூ.366 கோடி) ஈட்டிய வருவாயை விட 26 சதவீதம் அதிகம் கோவிட், தொற்று நோய் பிரச்சனையாலும், அதிகளவு வரி பங்களிப்பு செய்தமைக்காக வரி செலுத்தியவர்களை இந்த ஆணையரகம் நன்றியுடன் அங்கீகரிக்கிறது. இந்த ஆணையரகம் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. வரி செலுத்துவோருக்கு சரியான நேரத்தில் ஜிஎஸ்டி பதிவுகள், ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்தல், பணத்தை திரும்ப பெறுதல், தொடர் விழிப்புணர்வு நிகழ்வு, காணொளி மூலமாக புதிய மாற்றங்களை வரி செலுத்துவோருக்கு தெரிவித்து வருகிறது. 


மேலும், சேவா கேந்திரா மூலமாக வரி செலுத்துவோரின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது. இந்த ஆணையரக அலுவலகத்தில் வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி ஜிஎஸ்டி ஆணையரகத்துக்கு ரூ.44,340-க்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் அதிகார வரம்பில் உள்ளனர். சிமெண்ட், காகிதம் மற்றும் காகித பலகை தயாரிப்புகள், கொதிகலன் மற்றும் கொதிகலன் கூறுகள், தங்க நகைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஆதரவு சேவைகள் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2021-22 நிதியாண்டில் ஐடிசி செட்-ஆப் ரூ.8,253 கோடி ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் அனைவரும் தவறாமல் வரியை செலுத்துமாறு தெரிவிக்கபட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண