திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இந்த ஆட்டுச்சந்தை மிகவும் பிரபலமானதாகும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று சராசரியாக குறைந்த பட்சம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சுமார் ஒரு கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாய் வரை ஆடுகள், அதன் எடை, தரத்திற்கேற்ப விற்பனையாகும். இந்த ஆட்டுச்சந்தைக்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், கெங்கவல்லி, ஆத்தூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செம்மறியாடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதேபோல ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் ஏராளமானோர் இந்த சந்தைக்கு வருவார்கள்.குறிப்பாக பண்டிகை நாட்களில் விற்பனையானது அதிகாமக இருக்கும் என தெரிவித்தனர்.




இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 100-க்கணக்கான ஆட்டு வியாபாரிகள் காலையிலிருந்தே பல்வேறு வாகனங்களில் ஆடுகளை கொண்டு வந்து இறக்கினார்கள். ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் முஸ்லிம்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை அதன் எடைக்கு ஏற்ப பேரம் பேசி வாங்கி சென்றனர்.


ஒரு ஆடு சுமார் ரூ.11 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரம் வரை விலை போனது. ஆடுகளை போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். இதனால், வெளியூர்களில் இருந்து ஆடுகளைக் கொண்டு வந்த விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த சந்தையில் நேற்று சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வந்ததாகவும், சுமார் 1½ கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆட்டு சந்தை நடைபெறுவது சிரமாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிக்கைக்கு மிகவும் குறைந்த அளவு தான் ஆடுகள் விற்பனை ஆனது, இதனால் வியாபாரிகள் நஷ்டம் அடைந்தனர். மேலும் இந்த ஆண்டு வெகுசிறப்பாக ஆடுகள் விற்பனை செய்யபட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவித்தனர். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண