சிறுமி பலி விவகாரம்: 800 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சி மாவட்டத்தில் உணவு பொருள் குடோனில் இருந்த 800 கிலோ காலாவதியான உணவு பொருள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

Continues below advertisement

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் அடுத்துள்ள அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் தான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ், அவருக்கு வயது 15 ஆகும். மேலும் திருச்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

Continues below advertisement

ஆன்லைன் மூலம் நூடுல்ஸ் ஆடர் செய்த சாப்பிட்ட சிறுமி இறப்பு 

இந்த மாணவிக்கு நூடுல்ஸ் சாப்பிடுவது மிகவும் பிடிக்குமாம். இதனால் சில நேரங்களில் கடைகளில் நூடுல்ஸ் வாங்கியும்,  சில நேரங்களில் வீட்டிலேயே சமைத்தும் நூடுல்ஸை சாப்பிடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் வழக்கம் போல் ஆன்லைனில் நூடுல்ஸ் பாக்கெட் ஆர்டர் போட்டுள்ளார். சில நிமிடங்களில் வீட்டிற்கே வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் நேற்று இரவு நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்துவிட்டார். இருப்பினும், காலை அவர் நீண்ட நேரமாகியும் எழவில்லை. குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்ற போது தான் அவர் உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. 

இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விசாரணை மேற்கொண்ட போது,  சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


திருச்சியில் 800 கிலோ காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல

மேலும், இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்த போது அது சைனீஸ் நூடுல்ஸ் என்பது கண்டறியப்பட்டது. மேலும் இதனை பள்ளி மாணவி அமேசான் மூலம் வாங்கியுள்ளார்.

இந்த சைனீஸ் நூடுல்ஸ் மொத்த வியாபரம் செய்யும் ஒரு உணவு வணிகத்தில் இருப்பதைக் கண்டறிந்து அதே போன்ற நூடுல்ஸ் மற்றும் கோக் குளிர்பானத்தையும் சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டது. மேலும் அந்த மொத்த விற்பனையாளரின் உணவு வணிகத்தை ஆய்வு செய்த போது அங்கு காலாவதியான உணவு பொருட்கள் சுமார் 800 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அரியமங்கலம் குப்பை கிடங்கில் அழிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த குடோனுக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது. 

மேலும் அந்த கடையின் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 ன் படி பிரிவு 56 ன் கீழ் வழக்கு தொடரப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.


மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில்.. உணவு வணிகர்கள் காலாவதியான பொருட்களை தங்களது விற்பனை வளாகத்தில் வைத்திருக்கக் கூடாது என்றும், காலாவதியான பொருட்கள் வைத்திருக்கும் பட்சத்தில் அதனை தனி ஒரு அறையில் காலாவதியான பொருட்கள் இருக்கும் அறை என்ற குறிப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றும், மேலும் அதற்குண்டான பதிவேடுகளும் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு தர சட்டம் 2006 சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எந்த பொருளை வாங்கினாலும் அது காலாவதியான பொருளா? அல்லது தரமற்ற பொருளா என்பதை நன்கு ஆராய்ந்து வாங்க வேண்டும். மேலும் பாக்கெட் பொருட்கள் வாங்குவதை முற்றிலும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola