பூண்டின் மருத்துவ குணங்கள், நன்மைகள்..
நாம் அனைவரும் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளாக பூண்டு உள்ளது. தமிழகத்தில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத்தில் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு அதிக அளவில் பூண்டு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் பூண்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. நாடு முழுவதும் பூண்டு தேவையை நிறைவு செய்வதில் இந்த 2 மாநிலங்கள் முக்கியத்துவம் வகிக்கின்றது.
தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பூண்டு சந்தை உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பூண்டுக்கு, இந்த சந்தையில் வைத்துதான் விலை நிர்ணயம் செய்யப்படும்.
அதன் பிறகு மாநிலம் முழுவதும் மொத்தம், சில்லறை விற்பனைக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பப்படும். இந்நிலையில், மகாராஷ்டிரா ராஜஸ்தான் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டின் வரத்து மிகவும் குறைந்துள்ளது இதன் காரணமாகவே தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி வியாபாரி சுரேஷ் கூறுகையில்..
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 10 டன் பூண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டு வரத்து தற்போது குறைந்துள்ளது. இருந்தாலும் ஏற்கனவே வந்த கூண்டுகளை வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்து வைத்துள்ளனர் ஆகையால் பூண்டிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை தற்போது இல்லை என கூறினார்.
மேலும் வரத்து குறைந்ததால் இன்று ஒரு கிலோ பூண்டு ரூபாய் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த நிலை நீடித்தால் அடுத்த 10 நாட்களில் ஒரு கிலோ பூண்டு ரூபாய் 500 ரூபாய்க்கு விற்பனை ஆகும் என தெரிவித்தார்.
பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கினால் மட்டுமே இந்த விலை குறையும் இல்லையென்றால் மென்மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றார்.