திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருச்சி மாநகர் மட்டும் அல்லாமல் மாநகரை சுற்றியுள்ள பகுதிகளில் குற்றசம்பவங்கள் நடப்பதாக அதிகளவில் பொதுமக்களிடம் இருந்து காவல்துறைக்கு தொடந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தனர். இதனை தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். மேலும் தொடர் கொள்ளை செயலில் ஈடுபடுவோர்களின் பட்டியலை தயாரித்து அவரைகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருவெறும்பூர் பகுதியில் வீடுகளில் பூட்டுகளை உடைத்து தொடர் கொள்ளை அடித்து வழக்கில் ஒரு பெண் உட்பட 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் மதிப்புள்ள 60 சவரன் நகை, ஒரு கார், டூவீலர்களை பறிமுதல் செய்துள்ளனர்.




 




திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் அதிக அளவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்ட எஸ்பி மூர்த்தி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் காவல்துறை அதிகாரிகள் துரைராஜ், ஞானவேலன், செந்தில்குமார், வேலழகன், மற்றும் காவல் துறையினர் ஹரிஹரன், அன்புமணி, விஜயகுமார், நல்லேந்திரன், ராஜேஷ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு கொலை, கொள்ளைகள் வழக்கில் தொடர்புடைய கரூர் லாலாப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்கிற வெட்டு சங்கர் மற்றும் கோபால் என்கிற கருப்பத்தூர் கோபால், தொட்டியம் தாலுகா கொள்ளக்குடியை சேர்ந்த செல்வகுமாரை ஆகியோரை கண்டுபிடித்தனர். இதில் கருப்பத்தூர் கோபால் சமீபத்தில் கொலையுண்டு இறந்து போனார். இந்நிலையில் நேற்று அதிகாலை அம்மன் நகரில் பகுதியில் சுற்றித்திரிந்த சங்கர் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரை திருவெரும்பூர் தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.




தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த அனைத்து நகைகளும் கருப்பத்தூர் கோபால் மனைவி பொன்மணியிடம் இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் பொன்மொழியை கைது செய்ததோடு, அவருடன் தொடர்புடைய தொட்டியை சேர்ந்த பிச்சை மகன் ஜெகன் ஆகிய 4 பேரையும் கைது செய்து திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியில் கொள்ளை போன ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான 60 பவுன் நகை மீட்கப்பட்டன. மேலும் கொலைக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும்  இந்த கொள்ளையர்களை கண்டுபிடித்த தனிப்படை காவல்துறை திருச்சி மாவட்ட எஸ்.பி.மூர்த்தி பாராட்டினார் என்பது குறிப்பிடதக்கது.