திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள், மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பொதுக் கூட்டங்கள், கட்சியின் கொடியை ஏற்றுதல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திமுக சார்பாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டுள்ளது.  தற்போது 76வது நிகழ்ச்சியாக  கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள டிவிஎஸ் டோல்கேட்டில் அருகே முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலையை திமுக இளைஞர் அணி செயலாளர் , மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  காணொளி காட்சி மூலமாக , கழக முதன்மை செயலாளர் கே.என். நேரு , அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் இணைந்து திறக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து இருவரும் கலைஞர் சிலையை  திறந்து வைத்தார்கள். 




காணொளி மூலமாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது.. 


திருச்சி எப்போதுமே நமது முன்னால் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகும். திமுக தேர்தலில் நிற்கலாமா, வேண்டாமா என்று முடிவு எடுத்த இடம் திருச்சி. அதேபோல் தேர்தலில் மாபெரும் வெற்றியை மக்கள் அளித்தார்கள்.  திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார். அது மட்டும் அல்லாமல் அனைத்து மாவட்டத்திற்கும் முன் மாதிரியாக அன்பில் மகேஷ் செயலாற்றி வருகின்றார் என தெரிவித்தார். திருச்சி தெற்கு மாவட்டத்தில் முன்னால் தலைவர் கலைஞர் அவர்களின் திரு உருவ சிலை திறந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.




மேலும், இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட ,வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.