தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமனியை சந்தித்து மனு அளித்தார். அம்மனுவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கினர்.

Continues below advertisement

இதில் அவர்கள் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். எனவே விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு பேசியது... 

Continues below advertisement

இந்தியா ஒரு ஜனநாயக நாடு, விவசாயி தான் குத்தகை செய்யும் நிலத்தில் நெல், வாழை, கரும்பு, எள் போன்றவை சாகுபடி என இதை வேண்டுமானாலும் சாகுபடி செய்லாம்.  ஆனால் வருவாய் நீதிமன்ற நீதிபதி செல்வராஜ் குத்தகை விவசாயிகள் நெல் சாகுபடி மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்த பயிறும் சாகுபடி செய்ய கூடாது என மிரட்டுகிறார். 

இது சம்பந்தமாக சென்னை சென்று அத்துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க சென்ற விவசாயிகளை மறித்து கைது செய்தனர். மேலும்,  சென்னையில் சட்டமன்ற ஆரம்பித்துவிட்டது அங்கு சென்றால் மறியலில் ஈடுபடுவிர்கள் என போலீஸ் தடுத்தனர். 

தமிழ்நாட்டில் மது கடைகளை மூட வேண்டும்.

விவசாயிகளை தடுத்ததால் அவர்களை விடுவிக்க கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். அப்போது  மாநகர காவல்துறையினர் டவரில் மேலே ஏறி விவசாயிகளை இறக்காமல் அடித்தனர்.

காவல்துறை  தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் தற்போது காயம் ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  விவசாயிகளை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவது உரிமை. பஸ், ரயிலை மறிக்கவில்லை பொதுமக்களுக்கு எந்த இடையூறுயும் கொடுக்கவில்லை. இது தொடர்பாக மாநகர காவல் ஆணையுடன் புகார் அளித்தோம். அவர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி இருக்க வேண்டும். அரசாங்கம் நடத்துவதற்கு அதில் வருமானம் வருகிறது என்பதால் நடத்துகின்றனர்.  அதன் விலை அதிகம் உள்ளதால் குறைந்த விலைக்கு வாங்கி குடித்து இறக்கின்றனர். அதில் இறந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கள்ளு கடை, சாராய கடை எதுவும் இருக்க கூடாது.. 

சாராயக்கடைகளை மூடினால் தான் தமிழகத்திற்கு விமோஷனம் பிறக்கும், வருங்கால சந்ததியினருக்கு நன்றாக இருக்கும்.  கள்ளு கடை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வருகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், போதையே இருக்கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. போதை இல்லாத தமிழ்நாடு வளமாக இருந்தது. அந்த நிலைமை மறுபடியும் வரவேண்டும். 

தமிழ்நாட்டில் இளைஞர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் மது கடைகள் மூடப்பட வேண்டும். பக்கத்து மாநிலத்தில் இருப்பதால் அங்கு இருக்கிறது என்று கூறி நம்மை அழித்துக் கொள்ளக் கூடாது. கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது என்ற கேள்விக்கு. கள்ளு சாராயம் அதிக டேஞ்சர் கள்ளும் சரி, சாராயமும் சரி எதுவும் இருக்கக்கூடாது. பூரண மதுவிலக்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.