தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார் தலைமையில் திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரியத்தில் பதிவு புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற திட்டங்கள் தொடர்பான நிலுவை விவரங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் கூட்டத்தில் கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், தொழிலாளர் இணை ஆணையர் திவ்வியநாதன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் பேசியது.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும் புதிய, புதிய திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனால் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இந்த அரசு அமைந்தபிறகு, அனைத்து உதவிகளும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு கட்டுமான தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கவும், குறைந்தபட்சம் வேட்டி, சேலையாவது வழங்க வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
குவாரிகள் முடக்கப்பட்டதால் மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு - கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார்
திருச்சி தீபன் | 17 Oct 2023 05:48 PM (IST)
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனையால் குவாரிகள் முடக்கப்பட்டு மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் தெரிவித்தார்.
கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார்
NEXT PREV
Published at: 17 Oct 2023 05:48 PM (IST)