லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டோரின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் 'லியோ ஆகும். மேலும் இப்படத்தை பற்றி விமர்சனங்கள் சமூக வலையதலங்களில் பரவி வருகிறது. "LEO திரைப்படத்தில், அதிக அளவிலான வன்முறை மற்றும் கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  நாங்கள் எதிர்பார்த்ததை விட, 'லியோ' படத்தில் அதிக அளவிலான கிராஃபிக்ஸ் காட்சிகள் உள்ளதை பார்க்க முடிகிறது. LEO படத்தை 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம், என்கிற இலக்கை நாம் கொண்டிருந்தாலும், BBFC அதற்கு 18+ வழங்கியுள்ளது.  அதாவது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் இப்படத்தை பார்க்க முடியும் என கூறியது. துரதிர்ஷ்டவசமாக 15-17 வயதுக்குட்பட்ட இளம் ரசிகர்களால் இப்படத்தை பார்க்க முடியாத நிலை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 




இந்நிலையில், திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தமிழகத்தில் திரைப்படம் வெளியாவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,திருச்சி மாவட்டத்தில் லியோ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் 19-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை மட்டும் நாளொன்றுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் அதாவது, காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு முடிவடையும் வகையில் திரைப்படம் திரையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அசம்பாவிதமும் நிகழாத வகையில் விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : திருச்சி வருவாய் கோட்டாட்சியர்- 9445000455, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர்- 9445461797, லால்குடி வருவாய் கோட்டாட்சியர்- 9445000456, முசிறி வருவாய் கோட்டாட்சியர்- 9445000457. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.