Crime : திருச்சியில் கொடூரம்.. ஒரே பெண்ணுக்காக மோதிய நண்பர்கள்.. கொலையில் முடிந்த கள்ளக்காதல்..

முத்துப்பாண்டி அப்பெண்ணை சந்திக்க வருவதை சதீஷ் விரும்பவில்லை. அவருடன் இருக்கும் தொடர்பை துண்டிக்குமாறும் முத்துப்பாண்டியை சதீஷ் மிரட்டியுள்ளார்.

Continues below advertisement

திருச்சியில் ஒரே பெண்ணுடன் தகாத உறவில் இருந்த நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள கக்கன் காலனியை சேர்ந்த சதீஷ் என்ற சக்திகுமார் என்பவர் வேன் டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விவாகரத்து பெற்று தனியாக சென்றுவிட்டார். இதையடுத்து மகன் சதீஷின் பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் அதே பகுதியில் தனி வீடு எடுத்து வசித்து வந்தார்.

இதற்கிடையில் திருவெறும்பூர் காந்திநகர் சுருளி கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவரான முத்துப்பாண்டி என்பவரும் சதிஷூம் நண்பர்களாக இருந்துள்ளனர். இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் சதீஷ் வீட்டருகே உள்ள பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி முத்துப்பாண்டி அப்பெண்ணின் வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனிடையே சதீஷூக்கும் அந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் முத்துப்பாண்டி அப்பெண்ணை சந்திக்க வருவதை சதீஷ் விரும்பவில்லை. அவருடன் இருக்கும் தொடர்பை துண்டிக்குமாறும், இல்லாவிட்டால் அப்பெண்ணின் சகோதர்களிடம் சொல்லி விடுவேன் எனவும் முத்துப்பாண்டியை சதீஷ் மிரட்டியுள்ளார். ஆனால் நேற்று முன்தினம் அப்பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் முத்துப்பாண்டி வரவே அதனை சதீஷ் தனது வீட்டு வாசலில் இருந்து பார்த்துள்ளார். 

அவரை அழைத்து எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டாயா?, இங்கே வராதே என பல முறை சொல்லியும் நீ கேட்கவில்லை.  அப்பெண்ணின் அண்ணனிடம் சொல்லி விட்டேன். அவர்கள் இங்கே வந்து விட்டால் இனி நீ இங்கே வரமுடியாது என கூறியுள்ளார். இதனையடுத்து பயத்தில் முத்துப்பாண்டி தன்னை காப்பாற்றுமாறு சதீஷின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த முத்துபாண்டி  மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முத்துப்பாண்டி கத்தியுடன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்த சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

 

Continues below advertisement