திருச்சி கே.கே.நகர் பகுதியில் பாஜக சார்பாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூரியா சிவா செய்தியாளர்களை சந்தித்து பேசியது ..


பாஜக கூட்டணியை பார்த்து திராவிட கட்சிகளுக்கு அச்சம்..


பிரதமர் மோடி இன்னும் பலமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். தமிழ்நாட்டில் கலந்து கொண்ட அரசு நிகழ்வுகள் மற்றும் கட்சி சார்ந்த நிகழ்வுகளை தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள். பிரதமர் மோடி அவர்களுக்கு அனைத்து மாநிலங்களும் ஒன்றுதான் பிரிவினை பார்க்காத ஒரே பிரதமர் மோடி அவர்கள் மட்டும்தான். வருகின்ற தேர்தலில் இதுவரை திராவிட கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் வலுவான பாஜக கூட்டணி அமைந்ததே காரணம். எங்களுடைய கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும். தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றியை பெறும்.


தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் தலை தூக்கி உள்ளது இதற்கு முக்கிய காரணம் திமுக அரசு தான் என குற்றம் சாட்டினார். திமுகவின் முன்னாள் நிர்வாகி சாதிக் பாஷா, அவருடன் நெருங்கிய நட்புறவில் இருந்த திமுக நிர்வாகிகள் குடும்பங்கள் அனைவரும் இந்த போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு உடந்தையாக உள்ளனர். விரைவில் இந்த வழக்கு தொடர்பான பல்வேறு உண்மைகள் வெளிவரும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வருகின்ற தேர்தலில் தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன், வேட்பாளராக அறிவித்தாலும் தேர்தலில் போட்டியிடுவேன். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மிகப்பெரிய எழுச்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.




திருச்சி திமுக கவுன்சில் விஜய் மீது குற்றச்சாட்டு.. 


திருச்சியில் திமுகவில் என்ன சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதற்கு காஜாமலை விஜி தான் காரணமாக இருப்பார். எனது தந்தையின் வீடு, கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பெண் காவலரை தாக்கியது, காஜாமலை பகுதியில் வங்கியை கையகப்படுத்த சென்ற டி.ஆர்.ஓ தாக்கப்பட்டதற்கும் இவர்தான் ஏ1 குற்றவாளி இதேபோல் மாமன்ற கூட்டத்தில் மேயரை ஆபாச வார்த்தைகள் பேசி அந்த வீடியோக்களும் வெளியே வந்துள்ளது. சமீபத்தில் நான் ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தேன் மாநகராட்சி அலுவலகத்தில் சென்று மாநகராட்சி ஊழியர்களை காண்ட்ராக்ட் கொடுக்கவில்லை என கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அமைச்சர் கே.என் நேருவும் இதே வேலையை தான் செய்திருந்தார். ஆனால் தற்போதுள்ள டிஜிட்டல் மீடியா, சோசியல் மீடியாவால் விஷயங்கள் முடி மறைக்க முடியாமல் வெளியே வந்து விடுகிறது. எல்லா அரசு அதிகாரிகளையும் வெளிப்படையாகவே மிரட்டி அடிக்கிறார்கள் என்றால் சாமானிய மக்கள் என்ன ஆவார்கள், மேயர் தன்னுடைய தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை அதற்காக தீ குளிக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு காஜாமலை விஜி ஒன்றும் நல்லவர் இல்லை. அவருக்கு என்ன பிரச்சனை என்றால் மாநகராட்சி காண்ட்ராக்ட் அவருக்கு ஒதுக்கப்படவில்லை அதான் காரணம் அவருடைய மனைவி பெயரில் சிடோ கிரடார் என்ற  கம்பெனி ஒன்று நடத்துகிறார் அது சட்ட விதிக்கு உட்பட்டது.




திமுக கவுன்சிலர் காஜாமலை விஜயை பதவி நீக்க செய்ய வேண்டும்.. 


மாமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஒருவர் அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் எந்த ஓரு நிறுவனமும்  இருக்கக் கூடாது ஆனால் இவர் தனிப்பட்ட முறையில் மனைவி பெயரில் பல காண்ட்ராக்ட் எடுக்கிறார் இதில் எந்த பணியும் தரமாக செய்வது இல்லை அதில் பல பிரச்சினைகள் உருவாகிறது.


பெரிய தொகை வரக்கூடிய அனைத்து காண்ட்ராக்ட் களும் தனக்கு வர வேண்டும் என்று பார்க்கிறார் அதை கொடுக்காத பட்சத்தில் மேயரை கட்டாயப்படுத்தி அதை செய்ய   பார்க்கிறார். மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் பெட்ரோல் ஊற்றிக் கொள்ளும் போது கையில் தீப்பெட்டியுடன் வருவார்கள்.ஆனால் இவர் இரண்டு கையிலும் பெட்ரோல் பாட்டில் மட்டும் வைத்துக்கொண்டு சீன் கிரியேட் செய்து மேயருக்கு அழுத்தம் கொடுக்கிறார். எனவே கண்டிப்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் காஜாமலை விஜியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.