திருச்சி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த சிவராசு கோயம்புத்தூர் வணிகவரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக  பிரதீப்குமார் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.


புதிய மாவட்ட ஆட்சியருக்கு அரசு அதிகாரிகள், ஆட்சியராக அலுவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்  பிரதீப்குமார் கூறுகையில்.. திருச்சி மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் வரும் மனுக்களை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் விவசாயம், கல்வி, மருத்துவம் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். குறிப்பாக மாவட்டத்தில்  குடிநீர், சாலை வசதி மேம்பாடு மற்றும் தெரு விளக்குகள் சிறப்பான முறையில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் எந்த பகுதியாக இருந்தாலும் அந்த பகுதியில் இருக்கும் குறைகளை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவிக்கலாம், இதனை தொடர்ந்து புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், என்னிடம் புகார் தெரிவிக்கவும் என்றார். 




மேலும் தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மோசமானதை அடுத்து விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்வேன்.என உறுதியளித்துள்ளார். பொதுமக்கள் பட்டா மாறுதல் தொடர்பான காலதாமதத்தை, சிரமங்களை போக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் கருமுட்டை விவகாரம் மற்றும் மருத்துவம் தொடர்பான எந்த விவகாரத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பெற்றுள்ள மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கபடும் என்றார். பதவி ஏற்ற சில மணி நேரங்களில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அதிரடியாக ஆய்வு செய்தார். கொரோனா தொற்று தொடர்பாக எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட்ட்டுள்ளது எனவும், தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடுசெய்யபட்டுள்ளதா என மருத்துவமனை முதல்வரிடம் கேட்டரிந்தார்.




பின்பு கொரோனா வார்டு, புறநோயாளிகள் வார்டு, குழந்தைகள் வார்டு என அனைத்து இடங்களுக்கு நேரடியாக சென்று நோயாளிகளை சந்தித்து குறைகள் ஏதாவது இருக்கிறதா, மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கிறார்களா என கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வால் மருத்துவமனை வட்டாரங்கள் திக்குமுக்கு ஆடினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண