திருச்சி மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட முதியோர் இல்லம் இயங்கி வருகிறது. சில முதியோர் இல்லங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.மேலும் முதியோர் இல்லம் என்ற பெயரில் சிலர் தவறான செயல்பாட்டி ஈடுபட்டு வருவதாகவும் புகார் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கபட்டு முதியோர் இல்லங்களை ஆய்வு செய்தனர். இதன்படி சில இல்லங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமலும், முறையான பதிவு சான்று இல்லாமலும் இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில்  பதிவு செய்யாமல் நடத்தப்படும் முதியோர் இல்லங்களுக்கு சீல்வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.




தமிழகத்தில் முதியோர் இல்லம் நடத்தும் தொண்டு நிறுவனங்கள் அதை பதிவு செய்ததற்கான சான்றிதழை கட்டாயம் பெறவேண்டும். இதன்படி பெற்றோர் மற்றும மூத்த குடிமக்கள் பராமாரிப்புச் சட்டம் 2007-ஆம் ஆண்டின் கீழ் சம்பந்தபட்ட மாவட்ட சமூக நல அலுவலங்களில் பதிவு செய்து சான்றிதழ் பெறவேண்டும். இவ்வாறு பதிவு செய்யாமல் இல்லங்களை நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்கள் அனைத்து உரிய சான்றிதழுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கடந்த மாதம் 19-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த கால அவகாம் கடந்த 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த ஜூன் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 27 இல்லங்கள் பதிவு சான்றிதழ் பெற்று இருந்தன. மேலும் 7 இல்லங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருந்தன.




திருச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து முதியோர் இல்லங்கள்  பதிவுச் சான்றிதழை முறையாக பெற்றிருக்க பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக  மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்து சான்றிதழ் புதுப்பித்து முறைப்படி நடத்தவேண்டும் எனவும்,  முறைகேடாக முதியோர் இல்லம் நடத்தப்பட்டு வந்தால்  அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மாவட்ட நிர்வாகம் எச்சரித்து இருந்தது. மேலும்  கடந்த  மாதம் 30-ஆம் தேதியுடன் பதிவு சான்று பெறுவது முடிந்த நிலையில் மாவட்டத்தில் முறைகேடாக நடைபெற்று வரும் முதியோர் இல்லங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை தொடர்ந்து 6 இல்லங்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் இதன்பிறகு பதிவுச்சான்று பெறாமல் நடத்தப்படும் முதியோர்  இல்லங்களுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.