திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உறவினரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் தொடர்ந்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்ற நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி. பழனிச்சாமி ஆகியோர் பிரதமரை சந்திப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டபோது, ’அது குறித்து அவர்களிடம்தான் கேட்கவேண்டும்’ என்றார். மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா அவர்களின் வழியில் வந்த அதிமுக கட்சி  மக்களுக்கு சேவையாற்றுவதற்காக தொடங்கப்பட்டது. சில காரணங்களால் அதிமுக தனது நிலைப்பாட்டை மீறி தனியாக சென்றது.




அதிமுகவை மீட்டெடுத்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு அதனால்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று கட்சி தொடங்கப்பட்டது, என்பது நடைபெற்று முடிந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி, தோல்விகளை கடந்து நாங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் என்பதுதான். அதிமுக - அமமுக இணையுமா என்று கேட்டதற்கு உங்கள் யூகங்களுக்கு பதில் அளிக்கமுடியாது என்றார். மேலும் கட்சியின் கொள்கைக்காக என்னுடன் வந்தவர்கள் எல்லாம் என்னுடன் இருக்கிறார்கள். சுயநலத்திற்காக விலைபோக கூடியவர்கள் விலை போகிறார்கள் என்றார். 




தமிழகத்தில் அதிமுகவின் நிலைபாடுகள் தவறாக உள்ளது. அதை மீண்டும் ’மக்களின் நலனுக்காகவும், கட்சியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், காப்பாற்ற வேண்டும். என்பதற்காக  நாங்கள் தொடர்ந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும்’ என்றார். பின்பு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  மீது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியதிற்க்கு காரணம் என்ன என்று கேட்டபோது உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தால் சரிதான் என்றார்.


மேலும் அ.தி.மு.க தொடங்கியது முதல் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ,ஜெயலலிதா கட்சியை மக்களின் ஆதரவோடு வழிநடத்தினார். பின்பு ஜெயலலிதா அவர்கள்  சிறைக்கு  சென்ற பிறகு,  சசிகலா என்கிற ஒற்றை தலைமையில்தான் அதிமுக இருந்தது. தற்போது அது மாறி உள்ளது, அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் வரும் அனைத்தும்  சரியாகும் என்றார்.  தமிழகத்தில் தி.மு.க ஆட்சி எப்படி உள்ளது என்று கேட்டபோது, என்ன  மகிழ்ச்சியான விஷயம் என்பதை யோசிச்சு சொல்கிறேன் என்றார். மேலும்  எதையெல்லாம் எதிர்த்து போராடினார்களோ அதையே அவர்கள் தற்போது செய்கிறார்கள் கூறினார். தொடர்ந்து  அவர்கள் சொன்னதை மறந்து அவர்களே செயல்படுகிறார்கள் .திமுக ஆட்சியில் மகிழ்ச்சியை விட சிரிப்புதான் உள்ளது  என தெரிவித்தார்.