திருச்சி, புதுக்கோட்டை  உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். புதிய பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார். முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார்.

Continues below advertisement

புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற அரசு விழாவில் ரூ.348 கோடியில் 44 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, ரூ.207.70 கோடி மதிப்பில் 103 பயணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.223.06 கோடி மதிப்பில் 577 முடிவுற்ற திட்டப்பணிக்களையும் திறந்து வைத்தார். அதனுடன், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதலமைச்சர் வெளியிட்ட 6 புதிய அறிவிப்புகள்

* புதுக்கோட்டை மாவட்டத்தில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்.

Continues below advertisement

* பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

* ஆவுடையார்கோயில் அருகே வடகாடு ஊராட்சியில் ரூ.10 கோடியில் உயர்மட்டம் பாலம் அமைக்கப்படும். 

* வீரகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் 15 கோடி ரூபாய் செலவின் புனரமைக்கப்படும்.

* கீரமங்கலம் விவசாயிகள் நலன் கருதி குளிர்பதன கிடங்கு ரூ.1.6 கோடியில் அமைக்கப்படும்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புகளை கேட்ட புதுக்கோட்டை மக்கள் கைத்தட்டி ஆரவரம் செய்து வரவேற்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

களமாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விழாவில், நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா. ஆர்.ராசா, துரை வைகோ, நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா, ராமச்சந்திரன், சின்னத்துரை, பிரபாகரன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்த நிகழ்விற்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எத்தனை முனைபோட்டி வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்” என்று கூறினார்.