திருச்சி மாநகரில் சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிக்கும் வகையிலும், குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல் இருப்பதற்காகவும் மாநகராட்சி தரப்பில் பல்வேறு தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை தரம்பிரித்து வாங்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தபோதிலும் மாநகரில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் குப்பைகைளை தரம்பிரிக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுவதால் மீண்டும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் கால தாமதாமதம் ஏற்படுகிறது. பொது மக்கள் குப்பைகளை தரம்பிரித்து சரியாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்தால் இன்னும் அதிகமாக மாநகரை தூய்மையாக வைத்து கொள்ள முடியும் என்பதே ஒட்டுமொத்த திருச்சி மக்களின் எதிர்பார்ப்பு. அதற்கான முயற்சிகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறியதாவது: திருச்சி மாநகரை பொருத்தமட்டில் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் பொது இடங்களில் குப்பைகைளை கொட்டாமல் இருப்பதற்காக மாநகராட்சி ஊழியர்களை கொண்டு அந்த இடங்களில் கோலம் வரைதல் உள்ளிட்ட விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.




இந்நிலையில், இன்று காலை வெக்காளியம்மன் கோவில், இப்ராகிம் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இருபுறமும் சில இடங்களில் குப்பகைளை பொதுமக்கள் கொட்டி வைக்கும் நிலை இருந்தது. அதை நீக்கும் வகையில் சுவற்றில் இருபுறமும் வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றது. குறிப்பாக பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து தர மறுக்கிறார்கள். 30 சதவீதத்திற்கும் கீழ் உள்ளவர்கள் தான் குப்பைகளை தரம்பிரித்து வழங்குகிறார்கள். மற்றவர்கள் அப்படியே மாநகராட்சி ஊழியர்களிடம் கொடுக்கிறார்கள். இதனால் தொடர்ந்து அதை தரம்பிரிக்க நேரம் அதிகமாகி விடுகிறது. குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என்பது சட்டம். பொது மக்கள் அதை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றார். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே சுற்றுசூழலை பாதுகாக்க முடியும் , அவ்வாறு பாதுகாத்தால் வருங்காலத்தில் நோய் தொற்று பரவாமலும், சுத்தமான காற்றை சுவாசித்து அனைவரும் ஆரோக்கியமான இருக்கலாம் என திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மக்களுக்கு அறிவுரை கூறினார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண