சென்னை எழும்பூரில்  உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 7 - வது  ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு .. முதல் நாள் ஆட்டம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வியாழன், மாலை  4 மணிக்கு - தென் கொரியா vs ஜப்பான், மாலை 6.15 – மலேசியா vs பாகிஸ்தான், இரவு 8.30 – இந்தியா vs சீனா அணிகள் மோதுகிறது.  இரண்டாம் நாள் - ஆகஸ்ட் 4 ஆம்தேதி வெள்ளி,  மாலை 4 மணி - தென்கொரியா vs பாகிஸ்தான், மாலை 6.15 மணி – சீனா vs மலேசியா, இரவு 8.30 மணி – இந்தியா vs ஜப்பான் அணிகள் மோதுகிறது.  ஆகஸ்ட் 5 ஆம் தேதி சனி ஓய்வு நாள் ஆகும்.  ஆகஸ்ட் 6 ஆம் தேதி திங்கள் - மாலை 4 மணி - சீனா vs தென்கொரியா, மாலை 6.15 மணி – பாகிஸ்தான் vs ஜப்பான், இரவு 8.30 மணி – இந்தியா vs மலேசியா அணிகள் மோதுகிறது.  ஆகஸ்ட் 7 ஆம் தேதி  செவ்வாய் - மாலை 4 மணி – ஜப்பான் vs மலேசியா, மாலை 6.15 மணி – பாகிஸ்தான் vs சீனா, இரவு 8.30 மணி – இந்தியா vs தென்கொரியா அணிகள் மோதுகிறது.  ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதன் ஓய்வு நாள் ஆகும்.  ஆகஸ்ட் 9 ஆம் தேதி வியாழன் - மாலை 4 மணி – ஜப்பான் vs சீனா, மாலை 6.15 மணி – மலேசியா vs தென்கொரியா, இரவு 8.30 மணி – இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. 




இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெள்ளி ஓய்வு நாள் ஆகும்.  ஆகஸ்ட் 11 ஆம் தேதி சனி கிழமை - மாலை 3.30 மணி – 5 மற்றும் 6 ஆம் இடத்திற்கான போட்டியும், மாலை 6 மணி – முதல் அரையிறுதி,  இரவு 8.30 – 2 ஆவது அரையிறுதி. போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதி நாளான ஆகஸ்ட் 12 ஆம் தேதி  ஞாயிறு கிழமை - மாலை 6 மணி – 3 மற்றும் 4 ஆம் இடத்திற்கான போட்டியும்,  இரவு 8.30 – இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.  இந்த போட்டிக்கான கோப்பையை திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் hero Asian champion trophy யை தமிழ்நாடு நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி மேயர் அன்பழகன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் இணைந்து கோப்பையை அறிமுகபடுத்தினர். பின்பு அமைச்சர்கள் ஹாக்கி விளையாடினர்.  ஹீரோ ஏசியன் சாம்பியன்ஷிப்  ஹாக்கி போட்டி  16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இந்த போட்டி நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.



 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண