அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 80). நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டரான இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9 வயது சிறுமி, தன்னிடம் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வந்துள்ளார். அப்போது சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். பின்னர் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

 



 

இதில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி ஆஜராகி சுந்தரத்திற்கு எதிரான அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இவை அனைத்தையும் கேட்டறிந்த அரியலூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், சுந்தரத்திற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சுந்தரத்தை சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் அரசு வக்கீல் ராஜா வாதாடினார்.

 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.