திருச்சி மாவட்டத்தில் வக்பு வாரியத்திற்கு உரிமையான சொத்துக்கள் என்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து கிராமங்களின் சொத்துகளும் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி மாநகரம் தென்னூர் ஆட்டுமந்தை தெருவில், மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, உட்கார்ந்த நிலையில் எழுதிக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு சிலையை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு  திறந்து வைத்தார். மேலும் அதைத் தொடர்ந்து, சவேரியார் கோயில் தெரு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படி, புதிதாக நிறுவப்பட்டிருந்த குடிநீர் தொட்டியையும் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மேயர் அன்பழகன், மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்வின் முடிவில், அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறியபோது, "தென்னூர் ஆட்டுமந்தை தெருவில் திமுக வட்டச் செயலாளர் காளை என்கிற ஜோசப், தனது சொந்த செலவில் தனியார் இடத்தில் கருணாநிதி சிலையை அமைத்துள்ளார். அந்த சிலையை தற்போது திறந்து வைத்திருக்கிறேன்.


 






 


மேலும் கருணாநிதி எங்களை எல்லாம் உருவாக்கியவர். அவருக்கு இதுபோன்று யார் தங்களது சொந்த செலவில், தனியார் இடத்தில் சிலை வைத்தாலும், அதை திறந்து வைக்க தயாராக இருக்கிறேன். திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் உள்ள சிவாஜி சிலையை நாங்கள்தான் அமைத்தோம். மாநகராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், நீதிமன்ற உத்தரவினால் அந்த சிலையை எங்களால் திறக்க முடியவில்லை. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்றம் தான் முடிவு சொல்ல வேண்டும். திருச்சி மாவட்டத்தில் வக்பு வாரியத்திற்கு உரிமையான சொத்துக்கள் என்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து கிராமங்களின் சொத்துகளும் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பத்திரப் பதிவு பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.  நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் மக்கள், தாங்கள் குடியிருக்கும் வீடுளுக்கு பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பட்டா வழங்குவது குறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு, உரிய தீர்வு காணப்படும் என்றார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண