தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்துள்ள மைக்கேல்பட்டியில் தற்கொலை செய்துகொண்ட லாவண்யாவின் நினைவு ஒளியேற்றும நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் நகர்புறஊராட்சி தேர்தல், நகர்மன்ற தேர்தல், அனைத்திலும் திமுக கூட்டணிக்கு மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 55 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். திருச்சியில் ஒரு இடமும் சென்னையில் 4 இடமும் மதுரையில் ஒரு இடம் என வெற்றி பெற்றுள்ளோம். பல பொது இடங்களில் போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.வெற்றி பெற்ற மாநகராட்சி ,நகராட்சி பேரூராட்சி ஆகிய இடங்களில் மேயர், துணை மேயர் ,நகர்மன்ற தலைவர் ஆகிய இடங்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் அளிக்குமாறு முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.





மேலும் முதல்வர் நல்ல முடிவை எங்களுக்கு அளிப்பார் என தொடர்ந்து  கோரிக்கைகளை முன் வைத்து வருகிறீம் இதன் மீது கட்டாயமாக திமுக தலைவர் ஸ்டாலின் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். இதனை தொடர்ந்து  நாங்கள் நல்லிணக்கத்தோடு பேசி இடங்களைப் பெற்று தேர்தலை சந்தித்து கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். திருச்சியில் துணை மேயரும் கடலூரில் மேயரும் 9 நகராட்சிகளில் பதவிகளும்  கேட்பது எங்களது கடமை விருப்பம் என்றார். மேலும் திமுக பெற்ற வெற்றியை பற்றி விமர்ச்சனம் செய்துள்ளார்  ஓ பன்னீர்செல்வம்  என்ற கேள்வி பதில் அளித்த அவர்.. நடந்து முடிந்த தேர்தல் நேர்மையாக நடைபெற்றது. இதில் எந்தவிதமான உள்நோக்கத்துடன் நடத்தபடவில்லை மக்களுக்கு அனைத்து நடவடிக்கைகளையும் தெரியும் வகையில் வெளிபடையாக தான் நடைபெற்றது.  தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் நேர்மையாக வாக்கு சேகரித்தோம், அவர்கள் எங்கள் மீதும், ஆட்சியின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதன் வெளிபடையே திமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளது என்றார்.






தேர்தலில் தங்களது தோல்வியை எப்படி  நியாயப்படுத்த முடியுமோ அதை  ஓபிஎஸ் அவர்கள் செய்கிறார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியில் இருந்து விலகி தனியாக போட்டியிட பாஜக கட்சி பல இடங்களில் இராண்டாம் இடம் பிடித்துள்ளோம், தமிழக மக்கள் எங்களை ஏற்க்கொண்டனர் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார். குறிப்பாக அதிமுக விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது என பாஜகவினர் பெருமை  அடிக்கிறார்கள் இது அதிமுகவை சிறுமைப்படுத்துகிற  செயல் ஆகும்.  இப்போதாவது அதிமுக புரிந்துகொள்ளவேண்டும். பாஜகவின் செயல்பாடுகள் எவ்வாராக உள்ளது என்பதை அதிமுக தலைமை நன்கு கவனிக்க வேண்டும், இனியும் பாஜவை அதிமுக தோளில் தூக்கி சுமக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என்றார்.