தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக மாற்ற பல்வேறு திட்டங்களை திருச்சி மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகர் பகுதிகளில் வரி வசூல் செய்யும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக மாநகர் பகுதியில் சுமார் ரூ.98 கோடிக்கு பல்வேறு வகையிலான வரியினங்கள் வசூலாக வேண்டியுள்ளது. ஆகவே மாநகராட்சி ஆணையர் வைத்திலிங்கம் உத்தரவின் பேரில் அதை விரைவில் வசூல் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், திருச்சி மாநகராட்சியை பொருத்தமட்டில் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிகமான பணிகள் நடைபெற்று வருகிறது. பொது மக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிளில் ஏற்படும் பிரச்சினைகளை மாநகராட்சிக்கு தெரிவிக்கும் பொழுது உடனடியாக அந்த பிரச்சினைகளை சரி செய்து கொடுக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி செயல்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் உடனடியாக புகார் தெரிவித்தல் விரைந்து நடவடிக்கை எடுக்கபடும் என மாநகராட்சி ஆணையர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 




மேலும் மக்கள் பயன்பாட்டிற்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது. ஆனால் பொது மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி அதிகமாக நிலுவையில் இருப்பது அதிருப்தியை அளிக்கிறது. இதனால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இடையூறுகள் ஏற்படுகிறது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சிக்கு இன்னும் ரூ.95 கோடி வரி வசூல் நிலுவையில் உள்ளது.


அதை வசூல் செய்ய அதிகாரிகள் பொது மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக சொத்துவரி, தண்ணீர் வரி அதிகமாக நிலுவையில் உள்ளது. மேலும் அதிகாரிகளின் எச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 3 தினங்களில் ரூ.2 கோடியே 50 லட்சம் வசூலாகியுள்ளது. பொது மக்கள் மாநகராட்சிக்கு வரி செலுத்துவதை ஒரு ஜனநாயக கடைமையாக நினைக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகன்களும் வரி செலுத்தினால் தான் மாநகரை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்து கொள்ள முடியும். குறிப்பாக மாநகராட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும் eன அதிகாரிகள் என்றார்.


மீதமுள்ள ரூ.95 கோடி வரி நிலுவைத்தொகையை இந்த மாதம் இறுதிக்குள் அதிகாரிகள் வசூல் செய்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் வரியினை செலுத்த தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண