தமிழகத்தில் கொரோனா தொற்றின்  எண்ணிக்கை கடந்த சில  நாட்களாக மாவட்டங்களில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருவதால் அவற்றை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகங்கள் மிகுந்த கண்காணிப்பிலும், தடுப்பு நடவடிக்கையிலும், ஈடுபட வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவியபோது மாநில முழுவது பல்வேறு கட்டுப்பாட்டுகளை  விதித்து ஊரடங்கு அரசு பிறப்பித்தது. தொற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கிய பிறகு  மக்களின் நலனை கருதி பல்வேறு தளங்களுடன் ஊரடங்கை மாநில அரசு பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என மக்கள்  கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக சில மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.




குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஒரு வாரகாலமாக தினந்தோறும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்றை  கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் இல்லாமலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை ,முகக்கவசம் அணிவது இல்லை ஆகியவற்றை  பார்க்கும்போது தொற்றின்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது ,என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சிறு, குறு, கடைகள், மற்றும் வணிக வளாகங்கள், பெரிய அளவிலான கடைகள், பஜார் பகுதி, காய்கறி மார்க்கெட் ,போன்ற பகுதிகளில் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிப்பில் உள்ளனர், அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




 திருச்சி மாவட்டம் முழுவதும் மக்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோன்று காவல்துறை சார்பாக கொரோனா விதிமுறைகளை மீறியவர்கள் மீது அபதாரம் விதித்து வருகிறார்கள். திருச்சி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட 32  இடங்களில் மக்கள் அதிகமாக கூடுகிறார்கள், அரசு கூறிய  விதிகளை பின்பற்றாமல் இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டு ஆங்காங்கே  சிறப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் முகக்கவசங்கள் அணியாமல், சுற்றித்திரிந்த 875 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 4 லட்சத்து 75 ஆயிரம்  வசூல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் திருச்சியில் அண்ணாதுரை சிலை ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், மாம்பழச்சாலை, மேலப்புதூர் ,காந்தி மார்க்கெட் உள்ளிட்ட 32 இடங்களில் நேற்று காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் தடை உத்தரவை மீறி முகக்கவசங்கள் அணியாமல், சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள்  875 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.மெலும்  வருங்காலங்களில் மாநகரப் பகுதியில் வருபவர்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்களை வாங்க செல்லும்போது சமூக இடைவெளிகளை கடைபிடிக்கவேண்டும், இவற்றை அனைத்தையும் கடைபிடிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


கொரோனா  மூன்றாவது அலை மற்ற மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை 2 கோடி பேர்களுக்கு மேல் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர்.மேலும் இந்த தொற்றின் தாக்கம் மாநிலத்தில் ஏற்படாமல் இருக்கும் வேண்டுமென்றால், அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும், என மாநில அரசு பொதுமக்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளது.