திருச்சி நம்பர்-1 டோல்கேட் அருகே உள்ள பழூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 50). இவர் பெரம்பலூரில் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பணிக்கு செல்லமுடியாமல் மன வேதனையில் இருந்து வந்த ராஜா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




இதேபோல் மற்றொரு சம்பவம் :  திருச்சி பாலக்கரை ஆட்டுக்காரத்தெருவை சேர்ந்தவர் தனசேகரன் (39). இவர் காந்திமார்க்கெட் பகுதியில் ஒரு நகைபட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு அவர் தனியாக பட்டறை வைத்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை தனசேகரன் மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. சிறிதுநேரத்தில் அவர் தான் ஏற்கனவே வேலை பார்த்து வந்த இடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய மனைவி ரம்யாவுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அங்கு சென்ற அவர், தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து ரம்யா காந்திமார்க்கெட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்பத்தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.




இதேபோல் மற்றொரு சம்பவம் :  காட்டுப்புத்தூர் அருகே பிடாரமங்கலம் ஊராட்சி சாலை பட்டியை சேர்ந்தவர் சண்முகம்(55). இவர் இரண்டு கால்களும் ஊனமுற்று நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இவரது மனைவி விஜயலட்சுமி வாய் பேச முடியாமலும் காது கேட்காத நிலையில் இருந்துள்ளார். இந்த தம்பதியின் மகன் சந்தோஷ்குமார்(24) கோவையில் உள்ள தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நடக்க முடியாமல் மனவேதனையில் இருந்த சண்முகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சந்தோஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


 


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.