அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவின்பேரில், திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில், திருச்சி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் தலைமையில் தீவிரமான கண்காணிப்பு பணிகளை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பல இடங்களில் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்து, அதை மற்ற மாநிலங்களுக்கு கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றை முற்றிலும் தடுக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு நடவடிக்ககளை முன்னெடுத்து வருகிறது. இந்தநிலையில், திருச்சி-கரூர் சாலை பகுதியில் முருங்கைப்பேட்டையில் இருசக்கர வாகனங்களில் 2 பேர் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர்.




இந்நிலையில் அங்கு முருங்கைப்பேட்டை மேலத்தெருவில் 2 வாலிபர்கள் மொபட்டுகளில் மூட்டைகளுடன் வந்தனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சுரேந்தர்பாபு (வயது 30), திருவானைக்காவலை சேர்ந்த மணிகண்டன் (26) என்பது தெரியவந்தது.மேலும், அவர்கள் வைத்திருந்த மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 6 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அவற்றை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி மாட்டுத்தீவனத்துக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 மொபட்டுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் திருச்சி மாவட்ட அதிகாரிகள் கூறும்போது..  ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய புதிதாக குழுமைக்கபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.