தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல்  துறை சார்பாக பொது மக்களுக்கு பொதுவிநியோகம் மூலம் வழங்கப்படும் ரேசன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தலை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நேரடி நெல்கொள் முதல் நிலையங்களிலும், ரேஷன் அரிசி அரவை ஆலைகளிலும் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறைத் தலைவர் ஜோஷி நிரமல் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா கூறியது.. 




திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் சரக டிஎஸ்பிக்கள் தலைமையில் இனஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வில்  அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின்  அடிப்படையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, குற்ற செயல்களில் ஈடுபட்ட 64 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பா இந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை 
 திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் மொத்தம் 1,037 வழக்குகள் பதியப்பட்டு 1,102 நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். மொத்த வழக்குகளில் கள்ளத்தனமாக பதிக்க வைத்திருந்த ரேஷன் அரிசி சுமார் 310 டன்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பதுக்கி வைத்திருந்த கெரசின் சுமார் 211 லிட்டர் மற்றும் வீட்டு உப யோக சிலிண்டர்களை வணிக நிறுவனங்களில் பயன்படுத்தியதற்காக 231 சிலிண்டர்கள பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக நான்கு சக்கர வாகனங்கள் 70, டூவீலர்கள் என 134 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




இதுவரை நடப்பு ஆண்டில் சுமார் 26 வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டபட்டவர்களின் வழக்குகள் முடிக்கப் பட்டுள்ளன. இதுவரை நடப்பு ஆண்டில் சுமார் 26 வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டபட்டவர்களின் வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதி மன்ற விசாரணைக்கு ஆஜராகாத 63 நபர்கள் மீது வாரண்ட் நிறைவேற்றப்பட்டு விசாரணை தொடங் கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒருவர் மீதும் திருவாரூர் மாவட்டத்தில் 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 57 நபர்களில் 34 நபர்களுக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்குகளில் சம்பந்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 94 இரண்டு சக்கர வாகனங்கள் 75 மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் 3 என 172 வாகனங்கள் மீது 3 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் குடிமைப்பொருள் கள்ளக்கடத்தல் சம்மந்தமான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் பொருட்டு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950 தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனை முறையாக பயன்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து கிராமங்கள் நகரங்கள் மற்றும் மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுவரொட்டிகள் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டள்ளன. மேலும் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.