தைப்பூசம்:
தமிழ்கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். தை மாதத்தில் பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்த நாள் தைப்பூச திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த தைப்பூசத் திருவிழா வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள சூழலில், பக்தர்கள் தெற்கு ரயில்வேக்கு ஒரு கோரிக்கை வைத்தனர். அதன்படி, பிரபல கோவில்களில் ஒன்றான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் , மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்வதற்காக ஏற்பாடு செய்யும் மாறு கோரிக்கை வைத்திருந்தனர்.
மேல்வருத்தூரில் நின்று செல்லும் ரயில்கள்:
இந்நிலையில், மேல்மருவத்தூரில் ரயில்கள் தைப்பூசம் வரை நின்று செல்லும் என்ற அறிவிப்பை இன்று (நவம்பர் 27) தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே, ”சென்னை எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில் நவம்பர் 30 முதல் ஜனவரி 25 வரை மேல்வருவத்தூரில் நின்று செல்லும்.
சென்னை- எழும்பூர் - மதுரை பாண்டியன் விரைவு ரயில் டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை மேல்வருவத்தூரில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்றும் சென்னை எழும்பூர்- தஞ்சை உழவன் விரைவு ரயில் டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை நின்று செல்லும்.
அதேபோல், சேலம் விரைவு ரயிலும் டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை மேல்வருவத்தூரில் நிற்கும்” என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது இந்த அறிவிப்பு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: குறைதீர் கூட்டத்திற்கு வரும் இடத்தில் மேலும் குறைகள் - விரக்தியில் மயிலாடுதுறை மக்கள்
மேலும் படிக்க: ‘ஹோம் ஒர்க் நோட் எங்கே ?’; மாணவனை கம்பால் தாக்கிய ஆசிரியை - கோவில்பட்டி அருகே பரபரப்பு