மேற்குவங்கத்தில் 30 தொகுதிகளில் இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு - பதட்டமான வாக்குச்சாவடிகளில் அதிக அளவில் போலீஸ் குவிப்பு.


கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவுகள் அல்ல - வெற்றிக்காக தொய்வின்றி உழைக்க வேண்டும் : அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் மற்றும் துணைமுதல்வர் கடிதம். 


அடிக்கடி மோதி தமிழகம் வருவது வரவேற்கத்தக்கது, அவர் பரப்புரைக்காக தமிழகம் வரும்போதெல்லாம் திமுக அமோகவெற்றி பெறுகின்றது - திமுக  தலைவர் ஸ்டாலின்.    


தமிழகத்தில் இருந்து திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒழிப்பதே நாம் தமிழர் கட்சியின் நோக்கம் - நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். 


தமிழகத்தில் உண்மையான ஜெயலலிதா ஆட்சி அமைய அமமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் - அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். 


மதவெறியை தூண்டி அரசியல் லாபம் பெறநினைக்கும் கட்சி தான் பாஜக - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். 


தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைப்பு, கடந்த மூன்று மாதத்தில் 175 ரூபாய் வரை விலை அதிகரித்தது நினைவுகூரத்தக்கது.  


ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பிற்கு நேற்றோடு (மார்ச் 31) காலஅவகாசம் முடிந்த நிலையில், ஜூன் 30 2021 வரை மீண்டும் அவகாசம் நீட்டிப்பு. 


உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு உள்ளது என்றால் அதற்கு நான் என்ன செய்யமுடியும் - பரப்புரையில் நடிகர் ராதாரவி சர்ச்சை பேச்சு. 


ஏப்ரல் 4ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனல்காற்று வீசும் - 20 மாவட்டங்களில் இயல்பைவிட 5 5 டிகிரி அதிக வெப்பம் நிலவும் - வானிலை ஆய்வு மையம் 


தொடர் கொரோனா பரவலால் மீண்டும் பிரான்ஸ் நாட்டில் முழு ஊரடங்கு அமல் - ஏப்ரல் 3 முதல் மூன்று வாரங்களுக்கு முழுஅடைப்பு - பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்