தமிழக வெற்றிக்கழக மாநாடு
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநில மாநாட்டை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அருகேயுள்ள வி.சாலை பகுதியில் இம்மாதம் 23-ந் தேதி நடத்த இருப்பதாக முடிவு செய்திருந்தனர்.
இம்மாநாட்டுக்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை நடைமுறைப் படுத்துவதில் குறிப்பிட்ட நாட்கள் தேவைப்படும் என்பதால், ஏற்கனவே முடிவு செய்த தேதியில் மாநாட்டை நடத்துவது சிரமம் என்பதால் தேதி தள்ளிப்போனது. தொடர்ந்து, மாநாட்டை எந்த தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வந்தார்.
நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்குப்பிறகு தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் அக்டோபர் 27-ந் தேதி நடத்தப்படும் என்று நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த செய்தியை அக்கட்சியினர் மற்றும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
ஏற்கனவே செப்டம்பர் 23-ந் தேதி மாநாடு நடத்துவதற்காக காவல்துறையிடம் அக்கட்சியினர் அனுமதி பெற்றிருந்த நிலையில் தற்போது மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதால் அந்த தகவலை மீண்டும் கடிதம் மூலம் விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும். அதற்கான ஏற்பாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு 27 ஆம் தேதி நடைபெறுவதற்கு அனுமதி கோரி அக்கட்சியின் தலைவர் என் ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்த போது காவல் துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநாடு நடத்துவதாக 9 பக்க அறிக்கை சமர்பித்துள்ளனர்.
தமிழக வெற்றிக்கழக மாநாடுக்கு தயாராகும் திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இளைஞசர்கள் பட்டாளம் அதிரடியான முறையில் தயாராகி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ,வந்தவாசி ,செய்யார் ,ஆரணி உள்ளிட்ட நகராட்சிகளில் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் மாநாட்டிற்கு செல்ல விஜயின் புகைப்படும் கட்சியின் கோடி என அணைத்தும் இருப்பது போன்ற சட்டைகளை அதிக அளவில் அடர்செய்துள்ளனர். மேலும் சுவர்களில் நேற்றைய கலைஞசன்.! இன்றைய தலைவன்.! நாளைய முதல்வர் எனவும், நண்பா நண்பி நீ வா தெம்பா மாநாட்டிற்கு என சுவர் விளம்பரம் அதிகளவில் எழுதப்பட்டு வருகிறது.மேலும் பல்வேறு பகுதிகளில் பேனர்களும் வைக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டிற்கு அதிக அளவில் பஸ்கள் ,வேன் என அனைத்தும் புக்செய்து வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மாநாட்டிற்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேல் வரக்கூடும் என தமிழக வெற்றிக் கழகத்தினார் தெரிவிக்கின்றனர்.