திருவண்ணாமலை மாவட்ட  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புரட்டாசி மாத பௌர்ணமி வருவதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், 


திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் வருகின்ற 17ஆம் தேதி  அன்று புரட்டாசி மாத பௌர்ணமி நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்கள் அன்று சாமி தரிசனம் செய்ய மற்றும் கிரிவலம் செல்ல வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், போக்குவரத்து சீரமைக்க வேண்டும் , தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கவேண்டும், தேவையான போக்குவரத்து வசதிள்  14 கி.மீ கிரிவலப்பாதையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அங்கங்கே குப்பைகள் சேர விடாமல் உடனடியாக அகற்ற வேண்டும்.  கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள், பக்தர்கள் கோயிலினுள் முறையான வரிசையில் செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். 




 


பக்தர்களுக்கு தேவையான கழிவறை குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் 


கழிவறை வசதிகள் மற்றும் தேவையான குடிநீர் வசதிகளை மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆலோசனை வழங்கினார். கிரிவலப்பாதை மற்றும் கோயில் உட்புரத்தில் மருத்துவ முகாம் அமைத்திடவும் தேவையான இடங்களில் 108 அவசரகால ஊர்தியினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  காவல்துறை சார்பாக போதிய அளவிலான காவலர்களை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்புத்துறை சார்பாக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும்  தீயணைப்பு வீரர்கள் பக்தர்கள் அதிக காற்புறம் ஏறும் இடத்தில தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது அங்கு தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். கிரிவலப்பாதையில் கடை ஆக்கிரமிப்புகளை தவிர்க்க அனைத்து அரசு துறைகளின் சார்பாக ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமிக்கப்பட்டு  கிரிவலப்பாதை முழுக்க கண்காணிக்கப்படவேண்டும்,




 


திருநங்கைகள் பக்தர்களுக்கு இடையூறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  


பாதுகாப்பற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்வதை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மூலமாக கண்காணித்து தடுத்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  திருநங்கைகள் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சமூக நலத்துறை அலுவலர்கள் திருநங்கைகளுக்கு அறிவுரைக்கூட்டம் நடத்தி தெரிவிக்க வேண்டும். அதே போன்று குழந்தைகளை வைத்து யாசகம் பெறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். யாசகம் பெறும் முதியோர்கள் மற்றும் உடல்நலன் பாதிக்கபட்டவர்களை விசாரித்து காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நலத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர்கள் மந்தாகினி, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையர் காந்திராஜ்  மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.